ராஜபக்சே குடும்பம் : இந்தியாவுக்கு தப்பி ஓட்டமா? சுப்பிரமணிய சாமிக்கு எதிராக மக்கள்

இந்நிலையில், மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்குத் தப்பி ஓடியதாக இலங்கையில் பரவலாக செய்திகள் பரவின.
ராஜபக்சே குடும்பம் : இந்தியாவுக்கு தப்பி ஓட்டமா?
ராஜபக்சே குடும்பம் : இந்தியாவுக்கு தப்பி ஓட்டமா?NewsSense
Published on

இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதையொட்டி, தீ வைப்பது பொதுமக்கள் மீது தடியடி என அரங்கேறிவருகிறது.

இலங்கையில் அமைதியை கடைப்பிடிக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ராணுவ தளபதி சவேந்திரசில்வா எச்சரித்திருக்கிறார். இலங்கையில் நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் பல இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்குத் தப்பி ஓடியதாக இலங்கையில் பரவலாக செய்திகள் பரவின.

ஆனால், இந்தத் தகவலை மறுத்துள்ள இந்திய தூதரகம், ”இலங்கை அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பி ஓடியதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. இந்திய தூதரகம் அத்தகைய தகவல்களை திட்டவட்டமாக மறுக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

இப்படியான சூழலில் இந்திய அரசியலர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்அ கருத்து ஒன்று கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அவர், “ஸ்திரதன்மையை கொண்டுவர அங்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும்.இப்போதுள்ள சூழலை தமக்கு சாதகமாக இந்தியாவுக்கு எதிரான சக்திகள் பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றனர்,” என்று அவர் கூறி உள்ளார்.

அந்த பதிவில் அவர் இலங்கை என நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், அவர் இலங்கையைதான் சொல்கிறார் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

சுப்பிரமணியசாமியின் இந்த பதிவிற்கு இந்திய மக்களும், இலங்கை மக்களும் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

NewsSense
NewsSense

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com