KCNA வெளியிட்ட புகைப்படம்
ஜனவரி 2022 - ஒரே மாதத்தில் 7 ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது வட கொரியா.
இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணை சோதனை இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் 7வது சோதனையாகும்.
இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணை சோதனை இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் 7வது சோதனையாகும்.
ஒரு புறம் அண்டை நாடுகளான தென் கொரியா, ஜப்பான் ஆகியவற்றை மிரட்டவும், அந்நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா விதித்துள்ள தடையை அகற்றவும், வட கொரியா ஏவுகணை சோதனைகளை அடிக்கடி நடத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் வட கொரியா ஆறு முறை ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது.
KCNA வெளியிட்ட புகைப்படங்கள்
ஜப்பானிய மற்றும் தென்கொரிய அதிகாரிகள், Hwasong - 12 எனும் இந்த ஏவுகணை 2,000 கி.மீ. (1,240 மைல்கள்) உயரத்தை எட்டியதாகவும், 800 கி.மீ (500 மைல்கள்) தூரத்திற்கு 30 நிமிடங்கள் பறந்ததாகவும் மதிப்பிட்டுள்ளனர். இந்த ஏவுகணை, ஜப்பான் கடலில் விழுந்தது.
இந்த ஏவுகணை சோதனை அதன் துல்லியத்தன்மையை அறிவதற்காக நடத்தப்பட்டதாக நடத்தப்பட்டதாக வடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது. மேலும் மற்ற நாடுகளின் எல்லைக்குள் விழுந்து விடாமல் இருக்க உயரமான இடத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hwasong - 12 ஏவப்பட்ட போது ஏவுகணையில் பொருத்தப்பட்டிருந்த புகைப்படக்கருவி மூலம் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களை கேசிஎன்ஏ (KCNA) வெளியிட்டிருக்கிறது.