வட கொரியாவில் மென்மையான பெயர்களை தவிர்த்து துப்பாக்கி, வெடிகுண்டு, செயற்கைக்கோள் என குழந்தைகளுக்கு தேசபக்தி பெயர்களை வைக்குமாறு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்திருகிறார்.
பெயர் என்பது ஒவ்வொருவரின் அடையாளமாக கருதப்படும் ஒரு விஷயம்.
சிலர் வீட்டின் பெரியவர்களின் பெயரை வைப்பார்கள், சிலர் பிறந்த நேரத்தின் படி பெயர் வைப்பார்கள்.
குறிப்பாக தங்களது குழந்தைகளின் பெயர் மென்மையாக, கேட்பதற்கு இனிமையாக இருக்க வேண்டுமென நினைப்பார்கள்.
ஆனால் வடகொரியாவில் உள்ள குழந்தைகளுக்கு மென்மையான பெயர்களை வைப்பதற்கு பதிலாக இனி, போக் இல் (வெடிகுண்டு), சோங் இல் (துப்பாக்கி), உய் சாங் (செயற்கைக்கோள்) என ஆயுதங்களின் பெயர்களையே சூட்ட வேண்டும் என அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பெயர்கள் அவர்களின் தேசபக்தி வெளிப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த அதிரடி உத்தரவால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சயிலும் ஆத்திரத்திலும் இருக்கின்றனர்.
அரசின் வசதிக்கேற்ப இப்படி பெயரை மாற்ற நிர்பந்திப்பது முறையற்ற நடவடிக்கை என்று சிலர் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust