டைட்டானிக் போல பனிப்பாறையில் மோதிய சொகுசு கப்பல் - பயணிகள் நிலை என்ன?

”கப்பலின் மேலோட்டத்தில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போதைய பயணம் முடிவடைந்த பிறகு, அடுத்து மார்ச் 19-ம் தேதி புறப்படவிருந்த கப்பல் ரத்து செய்யப்படுகிறது”
Norwegian Cruise ship
Norwegian Cruise shipTwitter
Published on

நார்வே நாட்டிற்குச் சொந்தமான குரூஸ் லைன் கப்பல், அலாஸ்காவிற்குச் செல்லும் வழியில் ஒரு பனிப்பாறையில் மோதியதால் பாதியிலேயே அதன் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

Norwegian Sun என்றழைக்கப்படும் அந்தக் கப்பல், கடந்த ஜூன் 25 அன்று Hubbard Glacier பகுதிக்குச் செல்லும் போது ஒரு சிறிய பனிப்பாறையில் மோதியது. அதன் பிறகு ஆய்வுக்காக அந்த உல்லாசக் கப்பலானது ஜூனோவுக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் அந்த கப்பலிலிருந்த பயணிகளிடத்தில் கப்பலின் கேப்டன், இந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்.

"ஜூன் 25 2022 அன்று, அலாஸ்காவில் உள்ள ஹப்பார்ட் கிளாசியர் பகுதிக்குச் செல்லும் போது, நார்வே சன் அடர்த்தியான மூடுபனியால் தடுமாறியது. அதன் காரணமாகத் தவறுதலாக பனிப்பாறையில் மோதி விபத்து நேர்ந்தது.” என்று நார்வே குரூஸ் செய்தித் தொடர்பாளர் குரூஸ் ஹைவ் கூறினார்.

ship
ship Canva

மேலும், "கப்பல் முழுமையாகச் செயல்பாட்டில் உள்ளது. இருப்பினும், மதிப்பீட்டிற்காக அலாஸ்காவின் ஜூனோவுக்குச் சென்று கொண்டிருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

கப்பல் ஜூனாவ் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, குறைந்த வேகத்தில் நேரடியாக வாஷிங்டனின் சியாட்டிலுக்குச் செல்லும் என்றும், வியாழன் காலை வந்து சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கப்பல் ஜூன் 26 ஞாயிற்றுக்கிழமை ஜூனோவை வந்தடைந்தது.கப்பலுக்கு என்ன சேதம் ஏற்பட்டது? என்பது குறித்து அங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதுவரையில் பயணிகள் கரைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், திங்கள்கிழமை யாரும் கரைக்கு செல்ல அனுமதியில்லை, என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Norwegian Cruise ship
15000 ஆடுகளுடன் கடலில் மூழ்கிய கப்பல் : என்ன, எங்கே, எப்போது நடந்தது? - விரிவான தகவல்கள்
Norwegian Cruise ship
Norwegian Cruise shipTwitter

”கப்பலின் மேலோட்டத்தில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போதைய பயணம் முடிவடைந்த பிறகு, அடுத்து மார்ச் 19-ம் தேதி புறப்படவிருந்த கப்பல் ரத்து செய்யப்படுகிறது” என்று ஒரு அறிக்கையில் க்ரூஸ் லைன் தெரிவித்துள்ளது. மேலும் கப்பலை முழுமையாகப் பழுது நீக்கும் நோக்கத்தோடு இந்த ரத்து அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக குரூஸ் கப்பலை, பெர்முடா முக்கோணத்திற்குச் செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு அந்நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஒருவேளை கப்பல் காணாமல் போனால், முன்பதிவு தொகை முழுதும் திருப்பியளிக்கப்படும் என்பது தான் அது.

நார்வே ப்ரிமா லைனரில் இரண்டு நாள் பயணத்திற்கு, ஒரு அறைக்கு 1,450 பவுண்டுகள் (ரூ 1.4 லட்சம்) பயணிகள் செலுத்தியதாக தி மிரர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை, அப்படியே நடந்தாலும் உங்களுடைய பணம் கண்டிப்பாகத் திருப்பித் தரப்படும் என்று நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Norwegian Cruise ship
அல்லு சில்லாக உடைய போகும் கப்பல் - என்ன காரணம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com