
என்னதான் இன்று ஆண்கள் இருக்கும் எல்லா இடங்களில் பெண்களும் இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது பெண்கள் மட்டும் சூழ்ந்திருக்கும் இடங்களில் தான்.
இந்த பழக்கம் இன்று வந்ததல்ல பண்டையக்காலம் முதலே பெண்கள் மட்டும் கூடும் பழக்கம் பல கலாச்சாரங்களில் இருந்துவந்துள்ளது. பெண்கள் மட்டும் கொண்டாடும் திருவிழாக்கள் இருப்பதைக் காணலாம்.
இப்படி சீனாவில் பெண்கள் அனைவரும் ஒரு மொழியையே உருவாக்கியிருக்கிறார்கள். 400 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அந்த மொழி குறித்து ஆண்களுக்கு எதுவும் தெரியாது.
பெண்கள் ஒன்று சேரும் போது மனதளவில் ஆறுதல் தேவைப்படும் ஒருவருக்கு மற்றவர்கள் அரணாக இருப்பர். இப்படி உறவினர் பெண்களுக்கு உதவுவதற்காக தனியான எழுத்துக்களை கொண்ட மொழியை பெண்கள் உருவாக்கினர்.
நுஷு என்பது அந்த மொழியின் பெயர். ஹுனான் மாகாணத்தில் பெண்கள் எந்த சுதந்திரமும் அனுபவிக்காத விவசாய மக்கள் மத்தியில் இந்த மொழி உருவானது. இதன் எழுத்துக்களை மரங்களிலும் இலைகளிலும் சாம்பலால் எழுதி வைத்தனர்.
பின்னர், மடிப்பு விசிறிகளிலும் துணியின் எம்பிராய்டரி வடிவிலும் பொறிக்கப்பட்டது. சீனாவில் உருவானாலும் நவீனகால மக்களுக்கு இந்த எழுத்துருக் குறித்து தெரிந்திருக்க வில்லை.
டு ஃபெங் என்ற பெண் திரைப்பட இயக்குநர் தற்போது நுஷு மொழியை மீண்டும் கண்டறிந்து வருகிறார். இலக்கியத்தில் பெண்களின் இருப்பு, அனுபவங்கள் மிகவும் குறைவாகவே இடம்பெற்றுள்ளன என்கிறார்.
நுஷு பெண்களுக்கு அவர்களின் சமூக தடைகளை உடைக்கும் நம்பிக்கையை உருவாக்குகிறது எனக் கூறுகிறார். பெண்கள் ஒன்றாக இணைந்து அவர்களது பிரச்னைகளை எதிர்கொள்ள முடிந்தது.
இப்போது நுஷு எழுத்துருக்கள் மியூசியம்களில் காணப்படுகின்றன. 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஒடுக்கப்பட்டிருந்த பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிய மொழியை இன்று உணர்வுப்பூர்வமாக பெண்கள் பார்க்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust