என்னது இங்கலாம் ஏர்போர்ட்டே இல்லையா? விமான நிலையங்கள் இல்லாத நாடுகள் பற்றி தெரியுமா?
ஒவ்வொரு நாடும் அதன் தனித்துவமான கலாச்சாரங்களுக்கு புகழ்பெற்றது. நவீன உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி உள்ளது. மெட்ரோ வசதி, விமான போக்குவரத்து என பல விஷயங்கள் நாட்டில் வளர்ச்சியடைந்துள்ளன.
விமான போக்குவரத்து பலரது விருப்பமான போக்குவரத்தாக உள்ளது. வேகம் மற்றும் தொலை தூர இணைப்புகள் காரணமாக விமான போக்குவரத்து மற்ற வகை போக்குவரத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது
ஆனால் இப்போது கூட விமான நிலையங்கள் இல்லாத சில நாடுகள் உலகில் உள்ளன.
அப்படி ஏர்போர்ட்டே இல்லாத நாடுகள் குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
வாடிகன்
வாட்டிக்கன் உலகின் மிகச்சிறிய நாடாகும். வெறும் 0.44 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வாட்டிக்கன் சிட்டியில் விமான நிலையமே இல்லை.
விமானம் தரையிறங்குவதற்கு அதிக இடமில்லாததால் இங்கு விமான நிலையம் இல்லை. மாற்றுப் போக்குவரத்திற்கு எந்த நதியோ அல்லது கடலோ கூட இல்லை.
நீங்கள் ரயிலில் வெறும் 30 நிமிடங்கள் பயணித்தால் பக்கத்து நாடான இத்தாலியின் ஃபியமிசினோ மற்றும் சியாம்பினோ விமான நிலையத்தை அடையலாம்.
ஒரு நகரத்திற்குள் இருக்கும் ஒரே நாடு வாட்டிகன் நகரம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாடு ரோம் நகர எல்லைக்குள் அமைந்துள்ளது.
மொனாக்கோ
மொனாக்கோ வாட்டிகன் நகரத்திற்குப் பிறகு உலகின் இரண்டாவது சிறிய நாடு, மூன்று பக்கங்களிலும் பிரான்சால் சூழப்பட்டுள்ளது.
நாட்டில் சொந்த விமான நிலைய வசதி இல்லை. மொனாக்கோவை பார்க்க விரும்பும் அனைவரும், பிரான்சின் நைஸ் கோட் டி'அஸூர் விமான நிலையத்தில் தரையிறங்கி பிறகு ஒரு வண்டி மூலமாகவோ அல்லது படகு மூலமாகவோ செல்லலாம்.
சான் மரினோ
வாட்டிகன் நகரத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள சான் மரினோ உலகின் பழமையான மாநிலங்களில் ஒன்றாகும். முற்றிலும் இத்தாலியால் சூழப்பட்ட இந்நாட்டிற்கு கடல் வழி பயணம் கூட இல்லை.
இது மிகவும் சிறியதாக இருப்பதால், விமான நிலையம் இல்லை. அதிர்ஷ்டவசமாக சுற்றுலாப் பயணிகளுக்கும் நாட்டில் உள்ள மக்கள் எளிதாக பயணிக்க மிக நெருக்கத்தில் மற்ற நாட்டு விமான நிலையங்கள் வெறும் 16 கி.மீ தூரத்தில் உள்ளது.
அப்படி அருகிலுள்ள விமான நிலையங்களில் ஒன்று இத்தாலியில் உள்ள ரிமினி ஆகும். புளோரன்ஸ், போலோக்னா, வெனிஸ் மற்றும் பிசா போன்ற பல விமான நிலையங்கள் இதற்கு அருகிலேயே அமைந்துள்ளன. அவை உள்ளூர்வாசிகள் மற்றும் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.
லிச்சென்ஸ்டைன்
லிச்சென்ஸ்டைனும் ஒரு சிறிய நாடு, சுமார் 160 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பகுதி சில கிலோமீட்டர் நீளம் கொண்டது, அதன் முழு சுற்றளவு 75 கி.மீ வரை நீண்டுள்ளது. லிச்சென்ஸ்டைனின் இடம் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளின் காரணமாக இந்நாட்டில் விமானநிலையம் இல்லை.
உள்ளூர்வாசிகள் கார் அல்லது பஸ்ஸைப் பயன்படுத்தி 120 கிமீ தொலைவில் உள்ள சூரிச் விமான நிலையத்தை அடைகின்றனர்.
அன்டோரா
அன்டோரா நாடானது ஸ்பெயினுக்கும், பிரான்சுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்நாடு ஐரோப்பாவின் பைரனீஸ் மலைகளால் சூழப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளைப் போல சிறியதாக இல்லாவிட்டாலும், அன்டோரா ஒரு பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு பிரச்சனை மலைகள்தான்.
பள்ளத்தாக்குகளிலிருந்து 3000 மீட்டர் தொலைவில் பல சிகரங்கள் இருப்பதால் உயரமான இடங்களில் விமானங்களை இயக்குவது கடினம் மற்றும் ஆபத்தானது. அதிலும் குறிப்பாக பனி காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust