பறக்கும் விமானத்தின் ஜன்னலை உடைக்க முயன்ற பயணி - என்ன நடந்தது?

பாகிஸ்தானின் பெஷாவர் என்ற இடத்திலிருந்து துபாய் நோக்கி சென்றுக்கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் சண்டையில் ஈடுபட்டு, ஜன்னலை உடைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விமானம்
விமானம்Twitter
Published on

பாகிஸ்தானை சேர்ந்த பயணி ஒருவர் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் ஜன்னல்களை உடைக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பறக்கும் விமானம் ஒன்றில் அதை இயக்கிய இரு விமானிகள்  சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்தது. பயணிகளின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் பொறுப்பற்று நடந்துகொண்ட காரணத்தினால் அவர்களை இடைக்கால பணி நீக்கம் செய்தது நிறுவனம்.

விமானம்
நடுவானில் திறந்த விமான கதவு: பதறிய பயணிகள் செய்தது என்ன?

அதே போல பறக்கும் விமானத்தில் மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த முறை பிரச்னையில் ஈடுபட்டது பயணி ஒருவர். 

ARY Newsன் அறிக்கைப்படி, 

பாகிஸ்தான் இன்டெர்நேஷனல் ஏர்லைன்ஸின் PK 283 விமானம் ஒன்று பெஷாவரில் இருந்து துபாய் சென்றுகொண்டிருந்தது.  அப்போது பயணிகள் இருக்கைகளுக்கு நடுவிலிருந்த இடைவெளியில் பயணி ஒருவர் தொழுகை செய்துகொண்டிருந்ததாகத் தெரிகிறது. அவர்  நடக்கும் வழியில் தொழுதுக் கொண்டிருந்ததால், பயணிகள் தங்கள் இருக்கைகளுக்கு செல்ல சிரமப்பட்டனர். 

நகரச் சொல்லியும் அவர் அந்த இடத்தை விட்டு விலகாததால், வலுகட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு, அவரது இருக்கையில் அமரவைக்கப்பட்டார். இதனால் கோபமடைந்தவர் தன் சட்டையை கழற்றி விவாதத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளார். மேலும் தன் கோபத்தை வெளிப்படுத்த இருக்கைகளை குத்தியும், விமானத்தின் ஜன்னலை உதைத்து உடைக்கவும் முற்பட்டுள்ளார்.இதனால் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கடுத்து ஏவியேஷன் விதிகளின்படி,  அந்த பயணி அவரது இருக்கைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் துபாய் விமானக் கட்டுபாட்டு அறைக்கு தொடர்புகொண்ட PK 283 விமானத்தின் கேப்டன் சம்பவம் குறித்து தகவல் அளித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.

விமானம் துபாய் விமான நிலையத்திற்கு வந்தவுடன் பயணியை பாதுகாப்புப் படையினர் அழைத்து சென்றனர். மேலும் பாகிஸ்தான் இன்டெர்னேஷனல் ஏர்லைன்ஸ் அதிகாரிகள்  அந்த பயணி வருங்காலத்தில் விமானத்தில் பயணிக்க தடைவிதித்து, பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

விமானம்
நடுவானில் விமானிக்கு உடல்நல குறைவு - பயணிகளின் நிலை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com