பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றதால் இந்தியாவுக்கு எதிரான நாடாகவே பார்க்கப்படுகிறது. சுதந்திரத்துக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்களும் நடந்திருக்கின்றன.
இஸ்லாமிய நாடாக கருதப்படும் பாகிஸ்தானிலும் இந்து மக்கள் வசிக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு பணவீக்கத்தாலும் பசியாலும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களிடையே பணக்காரர்களாக திகழும் இந்தியர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாகிஸ்தானின் மிர்பூர் காஸ் என்ற இடத்தில் 1963ம் ஆண்டு பிறந்தவர் தீபக் பெர்வானி.
ஹிந்து சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் புகழ்பெற்ற நடிகரும், ஆடை வடிவமைப்பாளருமாவார்.
2022ம் ஆண்டு வெளியான அறிக்கைப்படி இவரது சொத்துமதிப்பு ரூ.71 கோடி.
தீபக் பெர்வானியின் உறவினர் நவீன் பெர்வானி. 52 வயதாகும் இவர் ஸ்னூக்கர் வீரராவார்.
ஸ்னூக்கர் என்பது டேபிளில் இருக்கும் வண்ணப்பந்துகளை குச்சியை வைத்து அடித்து குளிக்குள் தள்ளி விளையாடும் விளையாட்டாகும்.
2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் நவீன் பாகிஸ்தான் சார்பாக பங்கேற்று விளையாடினார்.
இவரது சொத்து மதிப்பு ரூ.60 கோடி என அறிக்கைகள் கூறுகின்றன.
கராச்சியை சேர்ந்த இவர் பாகிஸ்தானின் புகழ்பெற்ற நடிகையும் இயக்குநரும் ஆவார்.
1969ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். பாகிஸ்தானில் இவருக்கு பர்வீன் ரிஸ்வி என்ற பெயரும் உள்ளது.
இவர் நிக்கா (Nikah), முத்தி வர் சால் (Mutthi Bhar Chawal), யே ஆமன் (Yeh Aman), நாம் மெரா பத்னாம் (Naam Mera Badnaam) போன்ற படங்களுக்காக பிரபலமாக அறியப்படுகிறார்.
இவரது ஆண்டு வருமானம் ரூ.39 கோடி வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ரீத்தா கராச்சியை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டுவரை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருந்துள்ளார்.
பாகிஸ்தானில் இருக்கும் குறைந்த பெண் அரசியல்வாதிகளிடையே பணக்காரராக திகழ்கிறார் ரீத்தா.
இவரது ஆண்டு வருமானம் 30 கோடி ரூபாய் வரை இருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust