இசைக்கு மொழி, இன, மத பேதம் இல்லை. பாடல் வரிகளின் அர்த்தங்கள் புரியாவிட்டாலும், மதி மயக்கும் இசையும், அது தரும் அமைதியையும், இன்பத்தையும் விவரிக்க முடியாது. காரணம் இசை, மொழி என்ற எல்லைக்குள் இயங்காது என்பது தான்.
அதை நிரூபிக்கும் வண்ணம் அமைந்துள்ளது கேரளாவை சேர்ந்த இந்த மூவரின் பசூரி பாடலின் கவர் வெர்ஷன்.
அலி சேத்தி மற்றும் ஷாயி கில் இணைந்து பாடிய பசூரி என்ற பாடல் கடந்த பிப்ரவரி மாதம் யூடியூபில் வெளியிடப்பட்டது. வெளிவந்த சிறிது காலத்திலேயே பலரது கவனத்தை இந்த பாடல் ஈர்த்தது. உலகளவில் இந்த பாடல் மிகவும் பேசப்பட்டு, அனைவரின் பிடித்தமான பாடலாகவும் மாறியிருந்தது.
இந்த பாடல் பாகிஸ்தானில் நடைபெறும் கோக் ஸ்டூடியோ சீசன் 14ல் வெளியிடப்பட்ட பாடலாகும். கோக் ஸ்டூடியோவிற்காக வெளிவந்த பாடல்களிலேயே சீக்கிரமாக 1 மில்லியன் பார்வைகளை கடந்த முதல் பாடலாக மாறியது. 10 நாட்களில் இந்த பாடலுக்கு 10 மில்லியன் வியூக்கள் கிடைத்தது. மேலும், Spotify இந்தியாவில் இடம்பெற்ற முதல் பாகிஸ்தான் பாடல் என்ற பெருமையையும் பெற்றது இந்த பாடல்.
Spotify இந்தியாவின் வைரல் 50 என்ற லிஸ்டிலும் இந்த பாடல் இடம்பெற்றது. மே மாத 100 மில்லியன் வியூக்களை கடந்த இந்த பாடல், ஜூன் நிலவரப்படி 200 மில்லியன் வியூக்களை பெற்றது.
தற்போது கேரளாவை சேர்ந்த டானா ரசீக், துர்ரா ரசீக், தூபா ரசீக் இணைந்து இதன் கவர் வெர்ஷனை பாடி பதிவேற்றியுள்ளனர். இவர்கள் மூவரும் உடன்பிறந்தவர்கள். கோழிக்கோடு பகுதியில் காக்ரார்ட் என்ற ஒரு ஆர்ட் கேலரியில் படமாக்கப்பட்டுள்ளது இந்த Cover சாங்.
மூவரின் குரல்களும் கன கச்சிதமாக பொருந்த, இதன் சினிமாட்டோகிராபிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இவர்களில் டானா ரசீக் என்பவர் தலச்செரி பகுதியில் பிரபல பாடகர் ஆவார். இவர் பல விருதுகளையும் வென்றுள்ளார். கடந்த வருடம், பிரபல இந்தி பாடலான துஜ் மே ரப் திக்தா ஹே பாடலின் கவர் வெர்ஷனை வெளியிட்டு 1.5 மில்லியன் வியூக்களை பெற்றிருந்தார் டானா
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust