பிணத்துடன் உறவு கொள்ளாமல் இருக்க கல்லறைக்கு கதவா? உண்மை என்ன? Fact Check

இந்தக் கல்லறை பாகிஸ்தானில் இருப்பதாகவும் அங்கு புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை பாலியல் உறவிலிருந்து பாதுகாக்க அவ்வாறு கதவு பொருத்தப்பட்டிருப்பதாகவும் வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் உண்மை என்ன?
Photo of padlocks on grave in India's Hyderabad falsely claimed to be from Pakistan
Photo of padlocks on grave in India's Hyderabad falsely claimed to be from Pakistan Twitter
Published on

கடந்த சில நாட்களாகவே சமூகவலைதளங்களில் பச்சை நிறக் கதவு கொண்ட கல்லறை பற்றிய தகவல்கள் பரவி வருகின்றன.

இந்தக் கல்லறை பாகிஸ்தானில் இருப்பதாகவும் அங்கு புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை பாலியல் உறவிலிருந்து பாதுகாக்க அவ்வாறு கதவு பொருத்தப்பட்டிருப்பதாகவும் வலைதளங்களில் தகவல்கள் பரவின.

உண்மை சரிபார்ப்பு தளமான ஆல்ட் நியூஸ், சமூக வலைதளங்களில் வைரலான இந்த விஷயம் குறித்து ஆராய்ந்து பார்த்தபோது போலி என தெரியவந்துள்ளது.

இந்தக் கல்லறை உண்மையில் இந்திய நகரான ஹைதராபாத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்த தகவல் வைரலானது எப்படி?

இந்தத் தவறான தகவலை ஹாரிஸ் சுல்தான் என்ற ட்விட்டர் பயனாளர் முதலில் ட்வீட் செய்தார்.

ஆல்ட் நியூஸ் மூலம் உண்மையைச் சரிபார்த்த பிறகு, சுல்தான் தனது ட்வீட்டை நீக்கினார்.

Photo of padlocks on grave in India's Hyderabad falsely claimed to be from Pakistan
பாகிஸ்தான்: ஒரு உச்சி மாநாடும், அடுத்தடுத்து தலைவர்களின் மரணங்களும் - உலகை உலுக்கிய கதை

சரி கல்லறைக்கு ஏன் கம்பிக்கதவு?

இரும்பு கம்பிகளால் மூடப்பட்டிருக்கும் கல்லறையின் புகைப்படம் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து, அது பாகிஸ்தானில் இருந்து எடுக்கப்பட்டது என்று சில ட்வீட்கள் வந்தன.

இறந்த பிறகும், பெண்களுக்கு பாலியல் வன்புணர்வு ஏற்படுவதால் அங்கு கல்லறைகளையும் பூட்டி வைக்கத் தொடங்கியுள்ளதாகச் தகவல்கள் பரவின.

ஆனால் உண்மை என்ன?

இந்திய நகரான ஹைதராபாத்தின் மதானாபத் பகுதியின் தாராப் ஜங் காலனியில் சலார் மாலிக்கின் மசூதிக்கு எதிரே இந்தக் கல்லறை உள்ளது.

ஆல்ட் நியூஸ், இந்த கம்பிக் கதவை நிறுவும் விவகாரம் குறித்து ஆய்வு செய்தது.அதற்கு உள்ளூர்வாசிகள் இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர்.

கல்லறைகளைத் தோண்டி, இறந்தவர்களைப் புதைத்த சம்பவங்கள் சில நடந்திருப்பதால் கதவு நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.

மற்றொன்று இந்தக் கல்லறை, அந்த இடத்தின் நுழைவு வாயிலின் அருகில் இருப்பதால், மக்கள் தவறுதலாக அதன் மீது கால் வைத்து விடாமல் இருக்க அந்தக் குடும்பத்தினர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

உண்மையில் அது 70 வயது மூதாட்டியின் கல்லறை என்றும் அவரது மகன் தான் இந்தக் கதவை நிறுவியுள்ளார் என்றும் ஆல்ட் நியூஸ் தெரிவிக்கிறது.

Photo of padlocks on grave in India's Hyderabad falsely claimed to be from Pakistan
பாகிஸ்தான் : தூதரகத்தை எல்லாம் விற்கும் பரிதாப நிலையில் நாடு - உண்மை நிலை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com