சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள இந்த மலை நகரத்தில் குடியேறுபவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என நகர நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் வாலைஸ் என்ற இடத்தில் அமைந்துள்ளது அல்பினென் என்கிற மலை நகரம். இங்கு பல வகையான பறவை இனங்கள், அரிய வகை காட்டு விலங்குகள் இருக்கின்றன. உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடமாக இருக்கிறது அல்பினென்.
ஆனால், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும் அல்பினென் மலை நகரம், பல ஆண்டுகளாக மக்கள் குறைவாகவே வாழும் ஒரு பகுதியாக இருக்கிறது. கடந்த டிசம்பர் 2020ன் நிலவரப்படி, அல்பினென்னின் மக்கள் தொகை 243 பேர் மட்டுமே.
இங்கு முன்னர் வாழ்ந்த மக்கள் எல்லோரும் பெரிய நகரங்களுக்கு குடிப்பெயர்ந்து சென்றுவிட்டதனால், இந்த மலை நகரத்தின் மக்கள் தொகையை அதிகரிக்க நகர நிர்வாகம் முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன்படி, இந்த மலை நகரத்தில் குடியேறுபவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கு குடிப்பெயருபவர்களுக்கு வயது 45க்கும் குறைவாக இருக்கவேண்டும். இவர்கள் நிச்சயமாக சுவிட்சர்லாந்து குடிமகனாகவும், அந்நாட்டின் ’சி’ வகை குடியுரிமை அனுமதியை பெற்றவராக இருக்கவேண்டும்.
இந்த வகை அனுமதியை பெற அந்த நபர் குறைந்தது சுவிட்சர்லாந்தில் 5 ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டும் என்கிறது தி மிரர் செய்தி தளம்.
ஒருவேளை அல்பினென்னுக்கு வர விரும்புபவர்கள் மற்ற நாட்டவர்காக இருக்கும் பட்சத்தில் 10 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்க வேண்டும். அல்பினென்னுக்கு குடிபெயர்பவர்கள் 19 ஆண்டுகள் அந்த நகரத்தில் வாழ வேண்டும்.
இத்தனை நிபந்தனைகள் இருக்கும் இந்த அல்பினென் நகரத்தில் வேலை வாய்ப்புகள் குறைவு. இதன் காரணமாகவே அங்கிருந்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust