36 ஆண்டுகள் பழமையான ராணி எலிசபெத் எழுதிய கடிதம், அடுத்த 63 ஆண்டுகளுக்கும் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரசி 2ஆம் எலிசபெத், கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வரும் செப்டம்பர் 19ல் இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. ராணியின் மறைவுக்கு பிறகு இளவரசர் சார்லஸ் அரசரானார்.
இந்நிலையில், ராணி பயன்படுத்திய சில பொருட்கள் விற்பனைக்கு வந்த செய்தி எல்லாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வரிசையில் இப்போது பேசு பொருளாக இருப்பது, ராணி எலிசபெத் எழுதிய கடிதம் ஒன்று.
ராணி இரண்டாம் எலிசபெத் நவம்பர் 1986ல் ஒரு முறை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் எழுதிய கடிதம் தான் அது!
ஆஸ்திரிலேயாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ராணி விக்டோரியா கட்டிடத்தில் ரகசியமாக வால்ட்டில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது இந்த கடிதம். அதனை அடுத்த 63 ஆண்டுகளுக்கு திறக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடிதத்தின் எழுதியுள்ள விஷயங்களை பொதுமக்களுக்கு எப்போது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் சிட்னியின் மேயருக்கு ராணி தன் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தில், "வாழ்த்துக்கள். கி.பி. 2085 ஆம் ஆண்டில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பொருத்தமான நாளில், தயவுசெய்து இந்த உறையைத் திறந்து சிட்னியின் குடிமக்களுக்கு எனது செய்தியை அவர்களுக்குத் தெரிவிப்பீர்களா?" என்று இருக்கிறது.
விக்டோரியா மகாராணியின் வைரவிழாவை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 1898 ஆம் ஆண்டில் பெட்டகம் வைக்கப்பட்டுள்ள கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
இதனால், அடுத்த 63 ஆண்டுகளுக்கு அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே இருக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust