Morning News : இலங்கை அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்க

நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு தப்பியோடி, பின் அவரது பதவியையும் துறந்தார். இந்நிலையில், இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 8ஆவது அதிபராக பதவியேற்றுள்ளார்
இலங்கை இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க
இலங்கை இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கNewsSense
Published on

இலங்கை நாட்டின் 8-வது அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் நிலவும் அசாதாரண போக்கின் காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி பதவி விலகினார். இதனால் இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்நிலையில், இலங்கையில் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலம் நேற்று அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. அதிபர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுரா திசநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 223 வாக்குகளில் 219 வாக்குகள் பதிவானது.

அதிகபட்சமாக 134 வாக்குகள் பெற்ற ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இலங்கை நாட்டின் 8-வது அதிபராக நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார் ரணில் விக்ரமசிங்கே.பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பிரதமராகவும் இடைக்கால அதிபராகவும் இருந்த ரணில் தற்போது அதிபராகவும் பதவியேற்றுள்ளார்.

Ranil Wickramasinghe
Ranil WickramasingheTwitter

சென்னை தங்கத்தின் விலை குறைவு

தமிழகத்தில் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 296 ரூபாய் குறைந்திருக்கிறது. ரூ.37,040-க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 37 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் ரூ.4.630-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 61 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது

இலங்கை இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க
314 டன் ரஷ்ய தங்கம் குறிவைக்கப்படுகிறதா? - அதிர வைக்கும் தகவல்

ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு வருகிற 25-ம் தேதிக்கு மாற்றம் - மத்திய அரசு அறிவிப்பு

ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக், பி.பிளான், பி.ஆர்க். உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்பில் தகுதியான மாணவர்களைச் சேர்ப்பதற்காக தேசிய தேர்வு முகமை சார்பாக வருடத்திற்கு 2 முறை ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ‌ஜூன் மாதம் 24 முதல் 29-ம்தேதி வரை நடப்பு கல்வி ஆண்டுக்கான பகுதி-1 ஜே.இ.இ.

முதன்மை நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்று தேர்வெழுதினர். 2-ம் கட்ட நுழைவுத்தேர்வு வருகிற 21 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு வருகிற 25-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

JEE entrance
JEE entranceTwitter

இங்கிலாந்து பிரதமர் பதவி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இடையே நேரடிப்போட்டி


இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் ஆரம்பம் முதலே அதிக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ்சும் இறுதி சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். இதன் மூலம் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டிருக்கிறது.

புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்கான இறுதிச் சுற்றில் பழமைவாத கட்சியில் (கன்சர்வேடிவ்) மொத்தமுள்ள 2 லட்சம் உறுப்பினர்களும் தபால் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்யவுள்ளனர். இந்த வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளைப் பெற்றவர் செப்டம்பர் 5-ம் தேதி வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

ரிஷி சுனக் - லிஸ் டிரஸ்
ரிஷி சுனக் - லிஸ் டிரஸ்Twitter

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com