வட கொரிய அதிபர் - கிம் ஜாங் உன்
வட கொரிய அதிபர் - கிம் ஜாங் உன்NewsSense

வட கொரிய அதிபர் - கிம் ஜாங் உன் அரியப் புகைப்படங்கள்

கிம்மின் தந்தை, சகோதரி ஆகியோருடன் கிம் மற்றும் ஹியோன் இருப்பது மாதிரியான இன்னும் சில புகைப்படங்கள் அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்தன.
Published on

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் பற்றி இதுவரை கண்டிராத புகைப்படங்களை, அந்நாட்டின் அரசு ஊடகம் வெளியிட்டிருக்கிறது. கிம்மின் மறைந்த வழிகாட்டியான ஹியோன் சோல்-ஹேவை அடிப்படையாகக் கொண்ட "க்ளோசஸ்ட் டு தி சன்" என்ற ஆவணப்படத்தில் அவை இடம்பெற்றிருக்கின்றன.

அந்த ஆவணப்படமானது கிம் மற்றும் ஹியோன் இடையேயான உறவைப் பற்றி எடுக்கப்பட்டிருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2017 மற்றும் 2021 க்கு இடையில் கிம் தனது வழிகாட்டியின் இதய சிகிச்சையில் ஈடுபட்டதை ஆவணப்படம் விவரிக்கிறது.Kim Jong Un

Kim Jong Un
Kim Jong UnTwitter

அந்த புகைப்படங்களின் தொகுப்பு கிம் ஜாங்-உன் இளமைப் பருவத்தில் அவரது வாழ்க்கையைப் பற்றிய ஒரு அரிய விவரணையைக் கொடுக்கின்றன. கிம் 2011 முதல் வட கொரியாவின் அதிபராகவும், 2012 முதல் கொரியாவின் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். கிம் ஜாங்-உன்னின் தந்தை 1994 முதல் 2011 வரை வட கொரியாவின் இரண்டாவது அதிபராக இருந்தார்.

Kim Jong Un
Kim Jong UnTwitter

இந்த ஆவணப்படத்தை வடகொரிய அரசு ஊடகம் ஒளிபரப்பிய பிறகு, அதில் இடம்பெற்றிருந்த பல கருப்பு வெள்ளை புகைப்படங்கள் வைரலானது. ஒரு புகைப்படத்தில், தனது வழிகாட்டியான ஹியோன் சோல்-ஹேயின் கைகளை கிம் பிடித்திருப்பார். அப்போது ஹியோன் வட கொரிய இராணுவ அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரிய அதிபர் - கிம் ஜாங் உன்
வட கொரியா : கொரோனாவுக்கு அடுத்த ஆபத்து, பரவும் புதிய தொற்று - என்ன நடக்கிறது அங்கே?
Kim Jong Un
Kim Jong UnTwitter

கொரியப் போரின் போது, கிம் இல்-சுங்கின் மெய்க்காப்பாளராக ஹியோன் பணியாற்றினார். மெய்க்காப்பாளர் பாத்திரம் அவருக்கு வட கொரியாவின் புரட்சிகர வரலாற்றில் ஒரு இடத்தை வழங்கியதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கிம்மின் தந்தை இறந்த பிறகு, கிம் நாட்டின் அடுத்த அதிபராக வருவதற்குப் பெரிதும் உதவிய ஹியோன் கடந்த மாதம் இயற்கை எய்தினார்.

Kim Jong Un
Kim Jong UnTwitter

கிம்மின் தந்தை, சகோதரி ஆகியோருடன் கிம் மற்றும் ஹியோன் இருப்பது மாதிரியான இன்னும் சில புகைப்படங்கள் அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்தன. அவற்றை வட கொரிய மக்கள் பகிர்ந்து, ஹியோனுக்கு நினைவுகூர்ந்து வருகிறார்கள்

வட கொரிய அதிபர் - கிம் ஜாங் உன்
வட கொரியா: கிம் ஜாங் உன் வம்சத்தின் விறுவிறுப்பான கதை | பகுதி 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com