ரூ.300 கோடிக்கு விலை போகும் உலகின் கொடிய தேளின் விஷம் - என்ன காரணம் தெரியுமா?
ரூ.300 கோடிக்கு விலை போகும் உலகின் கொடிய தேளின் விஷம் - என்ன காரணம் தெரியுமா?ட்விட்டர்

ரூ.300 கோடிக்கு விலை போகும் உலகின் கொடிய தேளின் விஷம் - என்ன காரணம் தெரியுமா?

பொதுவாக நம்மை தாக்கி மரணத்தை கூட விளைவிக்கக்கூடிய விஷங்கள் தான், நம்மை காப்பாற்றுவதற்கான மருந்தாகவும் செயல்படுகிறது. இதனாலேயே, சில அரிய வகை மருந்துகள் மிகவும் விலையுயர்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில் தான் சேர்கிறது இந்த டெத்ஸ்டாக்கர் ஸ்கார்பியனின் விஷம்.
Published on

உலகின் மிகக் கொடிய தேள்களில் ஒன்றாக அறியப்படும் டெத் ஸ்டாக்கர் தேளின் விஷம் உலகின் விலையுயர்ந்த திரவமாக கருதப்படுகிறது. இதன் விலை ஒரு கேலனுக்கு 39 மில்லியன் டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் 300 கோடிக்கும் மேல்.

இந்த தேளின் விஷம் ஏன் இவ்வளவு விலையுயர்ந்தது? இந்த பதிவில் காணலாம்.

பொதுவாக நம்மை தாக்கி மரணத்தை கூட விளைவிக்கக்கூடிய விஷங்கள் தான், நம்மை காப்பாற்றுவதற்கான மருந்தாகவும் செயல்படுகிறது. இதனாலேயே, சில அரிய வகை மருந்துகள் மிகவும் விலையுயர்ந்தவையாக இருக்கின்றன.

அந்த வகையில் தான் சேர்கிறது இந்த டெத்ஸ்டாக்கர் ஸ்கார்பியனின் விஷம்.

ஒரு துளி விஷம்

இந்த விஷத்தில் நிறைய மருத்துவ குணங்களும் உள்ளன. முன்பே சொன்னது போல இதன் விஷம் ஒரு கேலனுக்கு 39 மில்லியன் டாலர்கள். இந்த ஒரு கேலன் பெற அந்த தேளிடம் இருந்து 2.64 மில்லியன் முறை விஷத்தை எடுக்கவேண்டும் எனக் கூறுகிறது பிரிட்டானிக்கா தளம்.

சர்க்கரையின் ஒரு தானியத்தை விடவும் அளவில் சிறியதாக இருக்கும் இதன் ஒரு துளி விஷமே 130 டாலர்களுக்கு விற்கப்படுகிறது

பயன்கள் என்ன?

டெத்ஸ்டாக்கர் தேளின் விஷம் மலேரியாவுக்கு சிகிச்சையளிக்க, சில புற்றுநோய் வகைகளை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.

தவிர மூளையில் ஏற்படும் கட்டிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகின்றது.

மேலும், இந்த விஷம் உடலில் இன்சுலின் உற்பத்தியை சீராக்கி, சர்க்கரை நோய்க்கான மருந்தாகவும் அமையலாம் என மருத்துவ வட்டாரங்கள் நம்புகிறது.

அதிக விலைக்கு என்ன காரணம்?

இவ்வளவு அதிக விலையில் தேளின் விஷம் விற்க காரணம், ஒரு தேள் ஒரு சமயத்திற்கு 2 மில்லிகிராம் விஷத்தை தான் தருகிறது. குறிப்பாக விஷம் கைகளால் பிரித்தெடுக்கப்படுகிறது.

மருத்துவ அம்சங்கள்

டெத்ஸ்டால்கர் தேளின் விஷத்தில் உள்ள நியூரோடாக்சின்கள் குளோரோடாக்சின், சாரிப்டோடாக்சின், சைலடாக்சின் மற்றும் அஜிடாக்சின்கள் ஆகியவை அடங்கும்.

இந்த குளோரோடாக்சின் தான் புற்றுநோய்க்கு சிகிச்சைக்கு பயன்படுகிறது. குளோரோடாக்சின் புற்று நோய் எந்த இடத்தில், என்ன அளவில் இருக்கிறது என்பதை கண்டறியவும் உதவுகிறது.

டெத்ஸ்டாக்கர் தேள் எங்கே இருக்கும்?

டெத்ஸ்டாக்கர் தேள் வட ஆபிரிக்காவிலிருந்து மத்திய கிழக்கு வரையிலான பாலைவன மற்றும் புதர்க்காடு வாழ்விடங்களில் காணப்படுகிறது.

டெத்ஸ்டாக்கர் தேள் மனிதர்களை தீண்டினால், உயிர் போகாது, ஆனால், மிகுந்த வலி ஏற்படலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com