Oppenheimer: ஹீரோவா? வில்லனா? - விகடனின் சிறப்புக் கட்டுரை

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு யாருக்கு அணுகுண்டை கண்டுபிடித்துக் கொடுத்தாரோ அதே அமெரிக்க அரசினால் பதவிகள் பிடுங்கப்பட்டு, கம்யூனிச ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டு, விசாரணைக்கும் துன்புறுத்தலுக்கும் இலக்கானார்.
Oppenheimer: ஹீரோவா? வில்லனா?  - விகடனின் சிறப்புக் கட்டுரை
Oppenheimer: ஹீரோவா? வில்லனா? - விகடனின் சிறப்புக் கட்டுரைNews Sense
Published on

உலக வரலாற்றின் மிகப் பெரிய திருப்பம் இரண்டாம் உலகப் போர் எனலாம். இந்த போரின் இறுதியும் மிகப் பெரியதுமான நிகழ்வு ஹிரோஷிமா, நாகசாகி அணு குண்டு வீச்சு.

2.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இரண்டு குண்டுகளில் இறந்தனர். பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஊனமுற்றனர்.

இந்த பேரழிவை உருவாக்கிய அணுகுண்டுகளை உருவாக்கியவர் ஓப்பன்ஹெய்மர். இவரது வாழ்க்கையை 820 கோடி மதிப்பில் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன்.

சிலியன் முர்ஃபி நடிப்பில் வெளியாகியிருக்கம் ஓப்பன்ஹெய்மெர் திரைப்படம் உலகம் முழுவதும் ஹிட் ஆகியிருக்கிறது.

ஹிட்லரால் கொன்று குவிக்கப்பட்ட யூத இனத்தவர் ஓப்பன்ஹெய்மெர். ஹிட்லருக்கு எதிராக அமெரிக்கா ஈடுபட்டு வரும் போரில் பங்காற்ற அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மன்ஹாட்டன் திட்டத்தின் அறிவியல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

நாசிசம், பாசிசத்துக்கு எதிராக, ஹிட்லரின் ஜெர்மனி, முசோலினியின் இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கவும், அறிவியலின் அடுத்தகட்ட பரிமாணத்தை உலகுக்கு காட்டவும் மெக்சிகோவில் உள்ள பாலை வனத்தில் அணுகுண்டு சோதனை நடத்தினார்.

முசோலினி சரணடைந்த பின்னர், ஹிட்லர் தற்கொலை செய்துகொண்ட பின்னர், ஜப்பானும் தோல்வியை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்த பின்னர் ஓப்பன்ஹெய்மரின் அணுகுண்டுகள் வெடிக்கவைக்கப்பட்டன.

அமெரிக்காவுக்கு உலகப் போரில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த, உலகப் போருக்கு பின்னாலும் அந்த நாட்டை வல்லரசாக நிலைநாட்டிய பெருமை ஓப்பன்ஹெய்மருக்கு சேரும்.

ஆனால் அவர் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்க அரசினால் பதவிகள் பிடுங்கப்பட்டு, கம்யூனிச ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டு, விசாரணைக்கும் துன்புறுத்தலுக்கும் இலக்கானார்.

யார் இந்த ஓப்பன்ஹெய்மர்? அவர வாழ்வில் இருக்கும் தீர்க்கப்படாத முரண் என்ன? விரிவாக தெரிந்துகொள்ள விகடனின் இந்த கட்டுரையை வாசியுங்கள்,

`ஜப்பான் அல்ல; ஓப்பன்ஹெய்மரை வில்லனாக்கியதே அமெரிக்காதான்!' - எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com