உக்ரைன் போர்: Switch on செய்யப்பட்ட செல்ஃபோன், கொல்லப்பட்ட 89 ரஷ்ய வீரர்கள்- என்ன நடந்தது?

எந்த பயிற்சியும் இல்லாத ரஷ்யா ராணுவ தளபதிகளே இந்த பேரிழப்பு காரணம் என ரஷ்ய பாதுகாப்பு கூட்டமைப்பின் முன்னாள் அதிகாரி இகோர் கிர்கின் கூறி உள்ளார்.
Russia now says 89 killed in Ukraine attack, blames mobile phones
Russia now says 89 killed in Ukraine attack, blames mobile phonesTwitter

ரத்தம் தோய்ந்த ஒரு நாளாக இந்த புத்தாண்டு ரஷ்யாவுக்கு விடிந்திருக்கிறது. ஒரே நாளில் 89 ராணுவ வீரர்களை அந்நாடு பறிக்கொடுத்து இருக்கிறது. ஏறத்தாழ ஓர் ஆண்டை நெருங்கும் போரில், இது ரஷ்யாவுக்கு கொடுக்கப்பட்ட பேரடி.

என்ன நடந்தது?

2014 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா கட்டுப்பாட்டில் இருக்கிறது மகிவிகா நகரம். 2014ஆம் ஆண்டு க்ரீமியாவை தன்னுடன் ரஷ்யா இணைத்துக் கொண்ட போது உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த இப்பரப்பும் ரஷ்யாவுடன் இணைந்தது.

இங்கு ரஷ்யாவின் ராணுவதளம் உள்ளது

இதனைதான் உக்ரைன் படைகள் தாக்கி உள்ளன. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஹிமரஸ் ராக்கெட்டுகள் கொண்டு உக்ரைன் தாக்கியதாக ரஷ்யா கூறுகிறது.

புத்தாண்டு பிறந்து ஓரிரு மணித்துளிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 400 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறுகிறது. ஆனால், ரஷ்யா கொடுக்கும் கணக்கு 89ஆக இருக்கிறது.

Russia now says 89 killed in Ukraine attack, blames mobile phones
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இல்லாமல் உலக நாடுகளால் சமாளிக்க முடியுமா? ரஷ்யா மீதான தடைகள் என்ன?
russia - ukraine war
russia - ukraine warNewsSense

கொதித்து எழுந்த மக்கள்

ரஷ்ய மக்கள் இந்த தாக்குதலால் கோபம் அடைந்துள்ளனர். எந்த உளவு தகவலையும் நம் ராணுவ வீரர்களுக்கு பகிரவில்லையா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஆனால், ராணுவ வீரர்கள் செல்ஃபோன் பயன்படுத்தியதுதான் இந்த தாக்குதலுக்கு காரணம் என ரஷ்யா கூறி உள்ளது.

ரஷ்ய ராணுவ தளபதி செர்ஜே, “செல்ஃபோன் பயன்படுத்துவது அப்பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், ராணுவ வீர்கள் செல்ஃபோனை பயன்படுத்தி உள்ளனர். இதன் மூலமாக நம் பகுதியை உக்ரைன் கண்டறிந்து இந்த தாக்குதலை தொடுத்துள்ளனர்.” என்று கூறி உள்ளார்.

ரஷ்யாவே காரணமே

எந்த பயிற்சியும் இல்லாத ரஷ்யா ராணுவ தளபதிகளே இந்த பேரிழப்பு காரணம் என ரஷ்ய பாதுகாப்பு கூட்டமைப்பின் முன்னாள் அதிகாரி இகோர் கிர்கின் கூறி உள்ளார்,

ராணுவ வீரர்கள் தங்கி இருந்த குடியிருப்பில் ராணுவ தளவாடங்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. உயிரிழப்பு அதிகமானதற்கு தாக்குதலில் அவை வெடித்ததும் காரணம் என அவர் கூறி உள்ளார்.

Russia now says 89 killed in Ukraine attack, blames mobile phones
உளவு விமானம், ரகசிய ரயில் - ரஷ்யா கண்ணில் மண்ணை தூவி USA சென்ற Ukraine அதிபர் ஜெலன்ஸ்கி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com