உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அந்த போரில் பங்கேற்பதற்கு ஆட்களைத் திரட்ட அதிபர் விளாடிமிர் புடின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதனால் கடந்த ஐந்து நாட்களில், 260,000 ரஷ்ய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் பல்வேறு இடங்களை ரஷ்யா கைப்பற்றினாலும் இன்னும் முழுமையாக உக்ரைனை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை.
உக்ரைன் நாட்டை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
இதற்கிடையில் உக்ரைன் மீதான ரஷ்யா போருக்கு ஆள் திரட்டும் செய்தியை அதிபர் அறிவித்ததையடுத்து, அந்நாட்டில் வசித்து வரும் ஆண்கள் பலரும் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
கடந்த ஐந்து நாட்களில், 260,000 ரஷ்ய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது. விமான நிலையங்கள் மற்றும் எல்லைகளில் சில ஆண்கள் வெளியேற மறுக்கப்படுவதாக ரஷ்ய ஊடகமான தி பெல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், செப்டம்பர் 21 அன்று புடினின் அறிவிப்புக்குப் பிறகு ரஷ்யாவில் குறைந்தபட்சம் 11 இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகங்கள் தீவைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் புலனாய்வு இயக்குநரகம், நாட்டின் தெற்கு கிராஸ்னோடர் பிரதேசத்திலிருந்து இராணுவ வயதுடைய ஆண்கள் வெளியேறுவதைத் தடுக்க ரஷ்யக் காவல்துறை சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பைனான்சியல் டைம்ஸ் படி, ரஷ்யாவின் புதிதாக அணிதிரட்டப்பட்ட படைவீரர்கள் ஆறு வாரங்களுக்குள் முன்வரிசைக்கு அனுப்பப்படுவார்கள் என்று உக்ரைன் எதிர்பார்க்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust