உக்ரைன் பெண்களை பயன்படுத்த ரஷ்ய வீரருக்கு அனுமதி வழங்கிய மனைவி - வெளியான ஆடியோ

உக்ரைன் பெண்களை பயன்படுத்தி போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்ய வீரர் ஒருவரின் மனைவியே வன்கொடுமை செய்ய அனுமதியளித்துள்ள ஆடியோ இணையத்தில் வெளியாகி உலகநாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Ukrainian women
Ukrainian womentwitter
Published on

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ரஷ்ய ராணுவம்

சமீபத்தில் பெண்களை தவறாக பயன்படுத்தும் யுக்தியை கையில் எடுத்துள்ளது. உக்ரைனில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

குழந்தைகள் முன்னபே அவர்களது தாயை கத்தி, துப்பாக்கிகளை காண்பித்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, 9 வயது சிறுமியை 11 ரஷ்ய ராணுவ வீரர்கள் இணைந்து வன்கொடுமை செய்தது என தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினர்கள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றனர்.

 Russia - ukraine war
Russia - ukraine war twitter
Ukrainian women
உக்ரைன் : "பாலியல் வன்கொடுமையை ரஷ்ய வீரர்கள் போர் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்"

உக்ரைனிய பெண்கள் மீது ரஷ்ய வீரர்கள் நடத்திவரும் வன்கொடுமைகளை ஏற்றுக்கொள்ள முடியாத உலக நாடுகள், ரஷ்யாவை எச்சரித்து வருகின்றனர். ஆனால் பெண்கள் மீதான வன்முறைகளை குறித்து ரஷ்ய ராணுவ வீரர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.

Ukrainian women
உக்ரைன்: "உங்களை சொர்க்கத்தில் சந்திக்கிறேன்" -போரில் தாயை இழந்த சிறுமியின் கண்ணீர் கடிதம்

இந்தநிலையில், ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரின் மனைவி, உக்ரைனிய பெண்களை பயன்படுத்த அனுமதி வழங்கிய ஆடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் உக்ரைனில் உள்ள பெண்களை வன்கொடுமை செய்து கொள், ஆனால் அதைப்பற்றி என்னிடம் எதுவும் கூற கூடாது புரிகிறதா என கூறிவிட்டு சிரிக்கிறார்.

அதனை தொடர்ந்து நீ எனக்கு அனுமதி தருவாயா என ரஷ்ய ராணுவ வீரர் கேட்க, அதற்கான அனுமதியை உனக்கு நான் தருகிறேன் என சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்கும் அந்த பெண்ணின் ஆடியோவை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com