சவுதி அரேபியா : 30 ஆண்டுகளாக கழிவறையில் தயாரிக்கப்பட்ட இந்திய உணவுகள் - ஆய்வில் அதிர்ச்சி

சவுதி அரேபியாவின் உணவகம் ஒன்றில் 30 ஆண்டுகளாக சமோசா உள்ளிட்ட பலகாரங்களைக் கழிவறையில் வைத்துத் தயாரிக்கப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.
Indian Snacks
Indian Snackstwitter
Published on

சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உணவகம் ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது.

இந்த உணவகத்தில் காலாவதியான இறைச்சி மற்றும் பாலாடைக் கட்டிகளைப் பயன்படுத்துவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தன. அதன் பேரில் அந்த உணவகத்திற்குச் சென்று அதிகாரிகள் சோதனையிட்டனர்.

சோதனையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது 30 ஆண்டுகளாக

சமோசா உள்ளிட்ட பாரம்பரியமிக்க பலகாரங்களைக் கழிவறையில் வைத்துத் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுதவிர காலாவதியான இறைச்சி மற்றும் பாலாடைக் கட்டி ஆகியவையும் அந்த உணவகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இதனால் பூச்சிகளும், எலிகளும் உணவகத்தில் அலைந்து திரிந்து இருந்தன.

இதனைத் தொடர்ந்து 30 ஆண்டு பழமையான உணவகத்தை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவகம் சவுதி அரேபியாவில் மூடப்படுவது என்பது இது முதல் முறையல்ல. கடந்த ஜனவரியில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 26 உணவகங்கள் மூடப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Indian Snacks
Saudi Arabia - வின் எண்ணெய் வளம் தீரப் போகிறதா? |சவுதி அரேபியா வரலாறு | பாகம் 3 | Video

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com