சவுதி அரேபியா: உலகின் பெரிய எண்ணெய் நிறுவனத்தின் மீது தாக்குதல் - என்ன நடந்தது?

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் பல்வேறு இலக்குகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தினர். இவை அனைத்தும் முறியடிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு ஜெட்டாவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
தீ விபத்து

தீ விபத்து

Twitter

Published on

செங்கடலில் இருக்கும் ஜெட்டா துறைமுகம், சவுதி அரேபியவின் முக்கியமான வணிக – தொழில் மையமாகும். வளைகுடாவின் சிறு நாடான ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். இவர்களை சவுதியின் தலைமையிலான கூட்டணிப் படை அவ்வப்போது தாக்கி வருகிறது. இதுவரையிலும் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெட்டாவில் உள்ள அராம்கோ விநியோக மையம், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி தீ விபத்து ஏற்பட்டது. இதை சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

இந்தச் சிறிய தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், உயிர்ச் சேதம் ஏதுமில்லை என்றும் கூட்டணி தெரிவித்துள்ளது. ஹவுதியின் இந்த தாக்குதல் ஏமனில் அமைதியை மீட்பதற்கும், மக்களின் துன்பங்களுக்கு முடிவு கட்டுவதற்குமான முயற்சிகளை நிராகரிப்பதாகக் கூட்டணிப் படை கூறுகிறது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் பல்வேறு இலக்குகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தினர். இவை அனைத்தும் முறியடிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு ஜெட்டாவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

அராம்கோ

அராம்கோ

Twitter

அல் ஷாஹீக்கில் பகுதியில் அராம்கோவால் நடத்தப்படும் கடல் நீரில் உப்பு நீக்கும் தொழிற்சாலை, தாஹ்ரன் அல் ஜானுப்பில் இருக்கும் மின் நிலையம், காமிஸ் முஷெய்த் நகரில் இருக்கும் பெட்ரோல் பங்க், யான்புவில் இருக்கும் அராம்கோவின் நீர்ம இயற்கை எரிவாயு தளம் அனைத்தும் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் குறி வைத்துத் தாக்கப்பட்டன.

ஜேசனை குறிவைத்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை, தெற்கு பகுதியைக் குறிவைத்த நான்கு ட்ரோன் விமானங்கள், காமிஸ் முஷெய்த் நகரைக் குறிவைத்த ஒரு ட்ரோன் விமானம், மக்கள் குடியிருப்பைக் குறி வைத்த மூன்று ட்ரோன் விமானங்கள், ஜெட்டாவை நோக்கி வந்த வான்வழித் தாக்குதல் அனைத்தும் மறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

ஏமன் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மார்ச் 29 ரியாத்தில் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் சார்பாக நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள மாட்டோம் என்று போராளிகள் அறிவித்து விட்டனர். இதை அடுத்தே ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மேற்கண்ட தாக்குதல்கள் நடைபெற்றன.

ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, அரபு லீக், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், ஜோர்டான், பாகிஸ்தான், எகிப்து போன்ற நாடுகளும் அமைப்புகளும் ஹவுதியின் இந்த தாக்குதல்களைக் கண்டித்துள்ளன.

தீ விபத்து

UAE : கடுமையான நிதி சிக்கலில் அரபு , மோசடி குற்றச்சாட்டு - பொருளாதாரம் வீழுமா | Podcast

ஹவுதி படையினர்

ஹவுதி படையினர்

Twitter

சவுதி பிரஸ் ஏஜென்சியால் டிவிட்டரில் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகளில் காமிஸ் முஷெய்த் நகரில் ஒரு கட்டிடம் மற்றுக் கார்கள் சேதமடைந்திருப்பதைக் காட்டுகிறது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் சார்பாக நடக்க இருக்கும் பேச்சு வார்த்தையைச் சீர்குலைப்பதுதான் இந்த தாக்குதலின் நோக்கம் என்று கூட்டணி நாடுகள் கூறியுள்ளன. வளைகுடா நாடுகளின் அமைதி முயற்சியைத் தோற்கடிப்பதே ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நோக்கம் என்று மேலும் கூறுகிறது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், சவுதி அரேபியாவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களைக் கண்டிப்பதாகக் கூறினார். மேலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐ.நா.வுடன் ஒத்துழைத்து மோதலைத் தணிக்குமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள், எண்ணெய் நிலையங்களைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர்.

தீ விபத்து

Shaji Ul Mulk : அரபு நாட்டின் கோடீஸ்வரனான சாமானிய இந்தியர் | வியக்க வைக்கும் கதை

ஹூசைன் பத்ரெடின் அல் ஹவுதி

ஹூசைன் பத்ரெடின் அல் ஹவுதி

Twitter

ஹவுதிகளின் மதத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹூசைன் பத்ரெடின் அல் ஹவுதியை ஏமன் அரசு கைது செய்ய மேற்கொண்ட முயற்சியால் 2004 ஆம் ஆண்டு மோதல் வெடித்தது.

ஆரம்பத்தில் பெரும்பாலான சண்டைகள் வடமேற்கு ஏமனில் நடந்தாலும் பிறகு அண்டை மாநிலங்களுக்கும், சவுதியின் மாநிலமான ஜிசானுக்கும் பரவியது. 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தலைநகர் சனாவை, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய பிறகு இது பெரும் உள்நாட்டுப் போராக மாறியது. சவுதி அரேபியா தலைமையிலான சில நாடுகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களைத் தாக்கி வருகின்றன. ஹவுதி போராளிகளும் பதிலடி தாக்குதல் கொடுத்து வருகின்றனர்.

இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை 25,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2,50,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். எட்டு வருடங்களாக நடந்து வரும் இந்த துன்பம் விரைவில் முடிவுக்கு வர வேண்டுமென்பதே அனைவரின் எண்ணமுமாகும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com