கைக்குலுக்க, கட்டிப்பிடிக்க கூடாது! கறார் சட்டத்தை போட்ட பள்ளி - என்ன காரணம்?

மாணவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். கைக்குலுக்குவது, கைக்கோர்த்து நடப்பது, ஒருவரை ஒருவர் ஹக் செய்வது, தொட்டு பேசுவது என எந்த விதமான நடவடிக்கைகளிலும் மாணவர்கள் ஈடுபடக் கூடாது.
கைக்குலுக்க, கட்டிப்பிடிக்க கூடாது! கறார் சட்டத்தை போட்ட பள்ளி - என்ன காரணம்?
கைக்குலுக்க, கட்டிப்பிடிக்க கூடாது! கறார் சட்டத்தை போட்ட பள்ளி - என்ன காரணம்?ட்விட்டர்
Published on

லண்டனில் உள்ள ஒரு பள்ளியில், மாணவ மாணவிகள் ஒருவரோடு ஒருவர் கைக்குலுக்கிக் கொள்ளக் கூடாது, கட்டி அணைத்துக்கொள்ள கூடாது போன்ற புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.

மாணவர்கள் ரிலேஷன்ஷிப்புக்குள் போகக்கூடாது என்பதால் இப்படியான சட்டத்தை போட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

லண்டனின் வடகிழக்கு பகுதியிலுள்ள க்லெம்ஸ்ஃபோட் என்ற இடத்தில் ஹைலாண்ட்ஸ் பள்ளி அமைந்திருக்கிறது. இங்கு மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் தொட்டு பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தகவலளித்த பள்ளி மேலாண்மை, “உங்கள் குழந்தைகளின் நலன் கருதியே இப்படியான சட்டத்தை நாங்கள் கொண்டுவந்துள்ளோம்” என தெரிவித்துள்ளது.

கைக்குலுக்க, கட்டிப்பிடிக்க கூடாது! கறார் சட்டத்தை போட்ட பள்ளி - என்ன காரணம்?
இளைஞர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் பிரஞ்சு அரசு: எப்போது அமலுக்கு வருகிறது புதிய சட்டம்?

மாணவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். கைக்குலுக்குவது, கைக்கோர்த்து நடப்பது, ஒருவரை ஒருவர் ஹக் செய்வது, தொட்டு பேசுவது என எந்த விதமான நடவடிக்கைகளிலும் மாணவர்கள் ஈடுபடக் கூடாது.

இந்த செயல்களை “முரட்டுத்தனமானது” என்று பள்ளி நிர்வாகம் வரையறுத்துள்ளது

”மாணவர்கள் சகஜமாக பழகுவதாக நினைத்து இவ்வாறான செயல்பாடுகளை வெளிப்படுத்தலாம். ஆனால், சிலருக்கு இது அசௌகரியத்தை தரக்கூடும். சிலர் இதனால் பாதிக்கப்படலாம், அல்லது காயங்கள் கூட ஏற்படலாம்” எனக் காரணம் சொல்கிறது பள்ளி நிர்வாகம்.

பள்ளி வளாகத்துக்குள் யாரும் காதலிக்கவும் அனுமதியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது

மேலும் மாணவர்கள் பள்ளியில் தொலைப்பேசியை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டங்கள் பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்புடையதாக இல்லை. இதற்கு மாணவர்கள், பெற்றோர் என இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

கைக்குலுக்க, கட்டிப்பிடிக்க கூடாது! கறார் சட்டத்தை போட்ட பள்ளி - என்ன காரணம்?
வைரஸ் போல இரண்டு கைகளாலும் எழுதும் மாணவர்கள் - அதிசய பள்ளி பற்றிய ஆச்சரியத் தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com