முட்ஷிபிஷி, டொயோட்டா, சோனி போன்ற உலகத் தர நிறுவனங்களின் தாயகமான ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே ஜூலை 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை சுடப்பட்டார். அன்று இரவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பல்வேறு பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
67 வயதான ஷின்ஷோ அபே, ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் இருந்து சுமார் 300 மைல் தொலைவில் உள்ள நாரா என்கிற பகுதியில், கெய் சாடோ என்கிற ஜப்பான் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரை ஆதரித்து ஜூலை 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை (ஜப்பான் நேரப்படி காலை 11.30 மணிக்கு) அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ஒரு நபரால் இரண்டு முறை சுடப்பட்டார்.
துப்பாக்கி குண்டுகள் இரண்டு, அவர் கழுத்துப் பகுதியில் பாய்ந்ததால் சுருண்டு விழுந்தார் அபே. அவரை உடனடியாக நரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்ற மருத்துவர்கள் போராடினார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ஜப்பான் நேரப்படி மாலை 5.03 மணிக்கு காலமானதாக பிபிசி தளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஷின்ஷோ அபேவைச் சுட்ட அந்த 41 வயது நபரைப் பாதுகாப்பு அதிகாரிகள் வளைத்துப் பிடித்தனர். ஜப்பானின் தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது, மலிவானது. இப்படிப்பட்ட தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது என்று கூறினார். மேலும் ஜனநாயகத்தின் அடித்தளமான தேர்தல் நேரத்தில் இந்த கொடூரம் நடந்திருப்பது முற்றிலும் மன்னிக்க முடியாத ஒன்று என்றும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஜப்பான் அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் அமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஷின்ஷோ அபே.
கடந்த 2006 - 07 காலகட்டத்தில் ஜப்பானின் பிரதமராகப் பொறுப்பேற்றவர், சில உடல் உபாதைகள் காரணமாக தன் பதவியிலிருந்து விலகினார். மீண்டும் 2012ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்றவர், கடந்த செப்டம்பர் 2020-ல் மீண்டும் உடல் நலக் குறைபாடு காரணமாகப் பதவியிலிருந்து விலகினார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் நொபுஷுகே கிஷி (Nobusuke Kishi) இவரது தாத்தா. அவரது வழித்தடத்தைப் பின்பற்றித்தான் ஷின்ஷோ அபே பிரதமரானார்.
ஜப்பானை ஒரு வலுவான ராணுவம் கொண்ட, சர்வதேச அரங்கில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மாற்றப் பெரிதும் பங்காற்றினார். அதே நேரம் ஒரு சாதாரண மற்றும் அழகான நாடாக ஜப்பான் இருக்க வேண்டும் என விரும்பினார்.
இவரது நடவடிக்கைகளால் அமெரிக்கா - ஜப்பானுக்கு இடையிலான உறவு வலுப்பெற்றது. ஜப்பானின் ராணுவ பலமும் அதிகரித்தது. ஒரு சில விஷயங்களில் மக்களின் எதிர்ப்பை மீறி, தன் இலக்குகளை அடைய கட்டாயப்படுத்தி ஜப்பான் நாடாளுமன்றத்தில் பல எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டார்.
ஷின்போ அபேவின் மனைவி அகி மட்சுசாகி (Akie Matsuzaki) தம்பதிகளுக்குக் குழந்தைகள் கிடையாது. ஷின்ஷோ அபேவின் சகோதரர்கள் அரசியல் மற்றும் கார்ப்பரேட் உலகில் பல உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.
ஷின்ஷோவின் மூத்த சகோதரர் ஹிரொநொபு அபே முட்ஷிபிஷி ஷோஜி பேக்கேஜிங் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். அவரது இளைய சகோதரர் நொபு கிஷி ஜப்பானின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் துணை அமைச்சராக இருக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust