Sky Cruise : தரையிறங்காமல் பல ஆண்டுகள் இயங்கும் பறக்கும் Hotel பற்றி தெரியுமா?

பயணிகள் கப்பலில் இருக்கும் ஆடம்பர நட்சத்திர ஹோட்டல் போல இந்த பறக்கும் ஹோட்டலில் அனைத்து விதமான வசதிகளும் இருக்கின்றன.
Sky Cruise
Sky CruiseTwitter
Published on

ஹோட்டல்களை தரையில் பார்த்திருக்கிறோம், தண்ணீரில் பார்த்திருக்கிறோம், இவ்வளவு ஏன் சொகுசு கப்பலில் கூட பார்த்திருக்கிறோம், ஆனால் வானில் பறந்து பார்த்ததுண்டா? அப்படி பறக்கும் ஹோட்டல் குறித்து தான் இங்கு தெரிந்து கொள்ளபோறோம்.

உலகின் மிகப்பெரிய பறக்கும் ஹோட்டல் அணுசக்தியால் இயக்கப்படுகிறது.

AI-பைலட் செய்யப்பட்ட ஸ்கை குரூஸ் பல நாட்கள் அல்லது மாதங்கள் கூட வானில் பறக்குமாம்.

இந்த கப்பல் 20 அணுக்கரு இணைவு இயந்திரங்களால் இயக்கப்படும். பயணிகள் அந்தந்த இடங்களிலிருந்து ஏற்றி இறக்கப்படுவார்கள். ஸ்கை க்ரூஸ் காற்றில் இருக்கும்போது பழுதுபார்ப்பு மற்றும் பிற பராமரிப்பும் மேற்கொள்ளப்படும் என்கின்றனர் இதன் வடிவமைப்பாளர்கள்.

சுமார் 5000 பேர்களை ஏற்றிக்கொண்டு பல ஆண்டுகள் இந்த விமானத்தில் பறக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

ஒரு நீண்ட நாள் வெக்கேஷனுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாக இருக்க கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sky Cruise
டைட்டானிக் கப்பல் மூழ்குவது பல ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டதா?

ஸ்கை குரூஸ் என்று கூறப்படும் இந்த பறக்கும் ஹோட்டல் சுற்றுப் பயணிகளை ஒரு சிறந்த அனுபவத்திற்கு அழைத்து செல்கிறது.

பயணிகள் கப்பலில் இருக்கும் ஆடம்பர நட்சத்திர ஹோட்டல் போல இந்த பறக்கும் ஹோட்டலில் அனைத்து விதமான வசதிகளும் இருக்கின்றன.

பொழுதுபோக்கு தளம், ஒரு ஷாப்பிங் மால், உணவகம், பார், விளையாட்டு மைதானம், சினிமா, திருமண மண்டபம், நீச்சல் குளங்கள், மீட்டிங் ஹால் மற்றும் அனைத்தையும் கொண்டுள்ளது.

இந்த பறக்கும் விமானம் குறித்த அனிமேஷன் வீடியோ ஒன்றை ஹஷேம் அல்-கைலி என்பவர் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும் ஹோட்டல் என்ற இந்த ஸ்கை க்ரூஸ் பறக்கும் ஹோட்டலின் விமான வடிவமைப்பு அனிமேஷனை டோனி ஹோம்ஸ்டன் என்பவர் உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sky Cruise
Airbus : சீனா, அமெரிக்காவிலிருந்து வரும் பாகங்கள் - விமானம் தயாரிக்கப்படுவது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com