உக்ரைன் வீரர் உயிரைக் காத்த ஸ்மார்ட்ஃபோன் - என்ன நடந்தது தெரியுமா?

ரஷ்யத் துருப்பால் சுடப்பட்ட 7.62 எம் எம் துப்பாக்கித் தோட்டா ஒன்று, உக்ரைன் வீரரின் ஸ்மார்ட்ஃபோனின் ஒரு பக்கத்தில் துளைத்து, மறு பக்கத்துக்கு வந்துள்ளதை சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளி ஒன்றில் பார்க்க முடிகிறது.
உக்ரைன் வீரர் உயிரைக் காத்த ஸ்மார்ட்ஃபோன்
உக்ரைன் வீரர் உயிரைக் காத்த ஸ்மார்ட்ஃபோன்Twitter
Published on

ஸ்மார்ட்ஃபோன்கள் இந்தியக் கலாச்சாரத்தைக் கெடுக்கிறது, குழந்தைகளைச் சோம்பேறிகள் ஆக்குகிறது, இளைஞர்களைப் பாழாக்குகிறது, கவனச் சிதைவை ஏற்படுத்துகிறது.... என ஸ்மார்ட்ஃபோன்கள் மீது பல புகார்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் அதே ஸ்மார்ட்ஃபோனைக் கொண்டு தான் இன்று சமோசா சட்னி ஆர்டர் செய்வது முதல் சம்பளப் பணத்தைச் செலவழிப்பது வரை செய்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியாலும், அதீத இணையப் பயன்பாட்டாலும் இதெல்லாம் இன்று சர்வ சாதாரணம் ஆகிவிட்டது.

ஒரு ஸ்மார்ட்ஃபோன் ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் என்று கூறினால் நம்புவீர்களா?

இதென்ன விட்டலாச்சாரியார் கதை மாதிரி இருக்கிறதே... இதெல்லாம் நம்ப முடியாது என நீங்கள் மறுக்கலாம். ஆனால் உண்மையிலேயே ஒரு நபரின் உயிரை, ஒரு ஸ்மார்ட்ஃபோன் காப்பாற்றி இருக்கிறது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நடந்து வரும் போருக்குப் பெரிய அறிமுகம் தேவை இல்லை. அந்த போரில் உக்ரைன் பக்கம் நின்று போராடும் வீரர் ஒருவர் தான் ஸ்மார்ட்ஃபோனால் உயிர் தப்பியுள்ளார்.

ரஷ்யத் துருப்பால் சுடப்பட்ட 7.62 எம் எம் துப்பாக்கித் தோட்டா ஒன்று, உக்ரைன் வீரரின் ஸ்மார்ட்ஃபோனின் ஒரு பக்கத்தில் துளைத்து, மறு பக்கத்துக்கு வந்துள்ளதை சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளி ஒன்றில் பார்க்க முடிகிறது. இந்த காணொளி முதன் முதலில் ரெட்டிட் சமூக வலைத்தளத்தில் வெளியானது.

ஸ்மார்ட்ஃபோனால் அந்த மனிதர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். உக்ரைன் வீரர் தான் வைத்திருந்த ஸ்மார்ட்ஃபோனுக்குத் தான் நன்றி கூற வேண்டும்.

இந்த காணொளிக்குப் பல இணையப் பயனர்கள் தங்களது வேடிக்கையான மற்றும் அழுத்தமான கருத்துக்களைப் பல தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ரெட்டிட் தளத்தில் இந்த காணொளியைக் கண்ட ஒருவர் "போர் வேண்டாமே" எனப் பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் வீரர் உயிரைக் காத்த ஸ்மார்ட்ஃபோன்
உக்ரைன் ரஷ்யா : பிரமாண்ட கப்பலை தாக்கியதா Ukraine? கோபமான Russia - தீவிரமடையும் போர்

மற்றொருவர் "அந்த ஃபோன் நோக்கியாவாக இருந்தால் அது இப்போதும் வேலை செய்யும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

வேறு ஒரு பயனர் "ஒருவேளை அந்த ஃபோன் நோக்கியாவாக இருந்திருந்தால், சுட்டவரை நோக்கி அந்த குண்டு திரும்பிப் பாய்ந்திருக்கும்" என வேடிக்கையாகப் பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் கூட, பெட்ரொலினா நகரத்தைச் சேர்ந்த ஒருவரை நோக்கி சுடப்பட்ட குண்டை, அவரது ஃபோன் கவர் தடுத்ததாக படித்தது இங்கு நினைவுக்கு வருகிறது.

அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்குமோ என மருத்துவர்கள் அஞ்சினர். ஆனால் ஃபோன் கவர் காரணமாக, துப்பாகி குண்டு அவரது உடலைத் துளைக்கவில்லை. எனவே பெரிய பாதிப்பின்றி தப்பினார் அம்மனிதர். இனியாவது ஸ்மார்ட்ஃபோனை அதிகம் திட்டாதீர்கள் நண்பர்களே.

உக்ரைன் வீரர் உயிரைக் காத்த ஸ்மார்ட்ஃபோன்
Ukraine Russia War: ரஷ்ய டாங்கிகளை துவம்சம் செய்யும் உக்ரைன் - சாத்தியமானது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com