பாம்பு, முள்ளம்பன்றி, ஆமை : 109 விலங்குகளை சூட்கேஸில் கடத்திய 2 பெண்கள் - விரிவான தகவல்கள்

பாங்காகின் முக்கிய விமான நிலையத்தில், பாம்புகள், முள்ளம்பன்றிகள் மற்றும் ஆமைகள் உட்பட 109 உயிருள்ள விலங்குகளை தங்கள் சூட்கேஸ்களில் கடத்த முயன்றதாக இரண்டு இந்தியப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Animals
AnimalsTwitter
Published on

தாய்லாந்தில் உள்ள பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு வரவிருந்த இரண்டு இந்தியப் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இரண்டு சூட்கேஸ்களுக்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அங்கு இருந்த எக்ஸ்ரே இயந்திரங்கள் காண்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் அவர்களின் சூட்கேஸ்களை பாதுகாப்பு அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, ​​50 பல்லிகள், 20 பாம்புகள், இரண்டு வெள்ளை முள்ளம்பன்றிகள், 35 ஆமைகள் உள்ளிட்ட 109 விலங்குகள் உயிருடன் இருந்துள்ளன.

X ray
X rayTwitter

இவற்றை நாடு விட்டு நாடு கடந்த முயன்றுள்ளதாகக் கருதிய அதிகாரிகள் நித்ய ராஜா (38), மற்றும் ஜாகியா சுல்தானா இப்ராஹிம் (24) ஆகிய இரண்டு இந்தியப் பெண்களுடைய சூட்கேஸ்களை பறிமுதல் செய்தனர்.

வன உயிர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விலங்கு நோய்ச் சட்டம் ஆகியவற்றை மீறியதாக இந்த இரண்டு பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Animals
Cannibalism : தன் இனத்தையே உண்ணும் விலங்குகள்; 7 விசித்திர உண்மைகள்

விமான நிலையங்கள் வழியாக விலங்குகள் கடத்தப்படுவது நீண்ட காலமாக நடந்து வருகிறது. 2019-ஆம் ஆண்டில், பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த ஒருவர், அவரது சூட்கேஸில் ஒரு மாத சிறுத்தை குட்டியைக் கொண்டு வந்துள்ளார்.

இதனைச் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Animals
சுனாமி, பூகம்பம் ஏற்படுவதை முன்பே கணிக்கும் விலங்குகள் - ஓர் ஆச்சர்ய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com