ஒரு மணி நேரத்தில் 249 கப் தேநீர் தயாரித்து உலக சாதனை படைத்த பெண்!

வீடுகளை இழந்தவர்களில் இங்கார் வாலண்டினும் ஒருவர். தீ அவரது வீட்டை எரித்தது மட்டுமல்லாமல், சுற்றுலா அலுவலகத்தின் தனது வேலையையும் இழந்தார்.
South African Woman Makes 249 Cups of Tea In One Hour To Set World Record
South African Woman Makes 249 Cups of Tea In One Hour To Set World RecordTwitter
Published on

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இங்கார் வாலன்டின் என்பவர் ஒரு மணி நேரத்தில் அதிக தேநீர் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வாழ்ந்துவந்த மலை கிராமத்தில் ஒரு காட்டுத்தீ பரவி பெரும் அழிவை ஏற்படுத்தியது. இதனால் 200க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்.

வீடுகளை இழந்தவர்களில் இங்கார் வாலண்டினும் ஒருவர். தீ அவரது வீட்டை எரித்தது மட்டுமல்லாமல், சுற்றுலா அலுவலகத்தில் அவரது வேலையின் ஒரு பகுதியாக இங்கார் நிர்வகித்து வந்த விருந்தினர் மாளிகைகள் அனைத்தையும் அழித்தது.

ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மீள தொடங்கிய இங்கார் வாலன்டினுக்கு ஒரு யோசனை வந்தது.

அதில், ஒரு மணி நேரத்தில் அதிக கப் தேநீர் தயாரித்து சாதனை படைக்க முயன்றார்.

249 கப் டீயை ஒரு மணி நேரத்தில் வாலன்டின் தயாரித்தார். ரூயிபோஸ் தேநீரில் அசல், வெண்ணிலா, ஸ்டாபெரி என மூன்று வகைகளில் தேநீர் தயாரித்துள்ளார்.

ரூயிபோஸ் என்பது தென்னாப்பிரிக்கப் பூர்வீக தாவரமான அஸ்பலதஸ் லீனரிஸ் என்கிற புதர் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் சிவப்பு மூலிகையாகும்.

South African Woman Makes 249 Cups of Tea In One Hour To Set World Record
"திங்கள் கிழமை தான் மோசமான நாள்"- புலம்பலை அங்கீகரித்த கின்னஸ்!

ஒரு மணி நேரத்திற்குள் குறைந்தபட்சம் 150 கப் தேநீர் தயாரிக்க வேண்டும் என்பது இந்த சாதனையின் இலக்காகும்.

இதில் இங்கார் வாலன்டின் ஒரு மணி நேரத்தில் அதிக தேநீர் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com