தென் கொரியாவுக்கும் ராமர் கோவிலுக்கும் தொடர்பா? தென் கொரிய தூதர் சொல்வதென்ன?

இந்தியாவுக்கான தென் கொரிய தூதர் ஜே-போக் "அயோத்தியா கோவில் இந்தியாவுக்கும் தென் கொரியாவுக்கும் வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது" எனக் கூறியுள்ளார்.
தென் கொரியாவுக்கும் ராமர் கோவிலுக்கும் தொடர்பா? தென் கொரிய தூதர் சொல்வதென்ன?
தென் கொரியாவுக்கும் ராமர் கோவிலுக்கும் தொடர்பா? தென் கொரிய தூதர் சொல்வதென்ன?Twitter
Published on

தென் கொரியா கலாச்சார ரீதியில் உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பிடித்துவருகிறது. கொரிய இசைக்கும் படங்களுக்கும் சீரிஸ்களுக்கும் இப்போதெல்லாம் உலக அளவில் வரவேற்பு கிடைக்கிறது.

தென் கொரியாவுக்கு இந்தியாவில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவிலுக்கும் தொடர்பு இருக்கிறது. இந்தியாவுக்கான தென் கொரிய தூதர் ஜே-போக் "அயோத்தியா கோவில் இந்தியாவுக்கும் தென் கொரியாவுக்கும் வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது" எனக் கூறியுள்ளார்.

மேலும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

சரி அப்படி அயோத்தியாவுக்கும் தென் கொரியாவுக்குமான வரலாற்றுத் தொடர்புதான் என்ன? பார்க்கலாம்.

கி.பி முதலாம் நூற்றாண்டில் அயோத்தியாவில் சுரிரத்னா என்ற இளவரசி இருந்துள்ளார். இவர் மன்னர் பத்மாசென் மற்றும் இந்துமதி தம்பதியின் மகளாவார்.

பத்மாசென் கௌசலா என்ற ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தார். இது இன்றைய உத்தரபிரதேசம் மற்றும் ஒடிஷாவை உள்ளடக்கியதாகும். பத்மாசென் தனக்கு கிடைத்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்காக கொரிய மன்னர் கிம் சுரோவுக்கு தனது மகளை திருமணம் செய்துகொடுக்க முடிவு செய்தார்.

தென் கொரியாவுக்கும் ராமர் கோவிலுக்கும் தொடர்பா? தென் கொரிய தூதர் சொல்வதென்ன?
சசிந்திரன் முத்துவேல்: எளிய தமிழர் நியூ கினியாவில் கவர்னரானது எப்படி? நெகிழ வைக்கும் கதை!

அதன்படி பரிவாரங்களுடன் கொரியா சென்று மகளை சுரோ மன்னருக்கு மணம்முடித்துக் கொடுத்தார். அயோத்தி இளவரசி கொரியாவில் ராணி ஹூ என்று அழைக்கப்பட்டார்.

இந்த தம்பதியின் வழியில் கிம்-ஹே-கிம் என்ற வம்சம் உருவானது. இதனால் இந்த வம்சத்தின் தாயாக பார்க்கப்பட்டார் ராணி ஹூ.

ராணி ஹுவின் நினைவாக கொரியாவில் சாரியு ஆற்றின் கரையில் 7,500 கிலோ எடையுள்ள மூன்று மீட்டர் உயரமுள்ள கல்லைப் பயன்படுத்தி ஒரு நினைவுச்சின்னம் கட்டப்பட்டுள்ளது. 

தென் கொரியாவுக்கும் ராமர் கோவிலுக்கும் தொடர்பா? தென் கொரிய தூதர் சொல்வதென்ன?
சீனா, கொரியா, ஜப்பான் : லிஃப்ட்களில் எண் 4ஐ தவிர்க்கும் நாடுகள்; ஏன்? திகிலூட்டும் உண்மை

இந்த கதை குறித்து கொரிய வரலாறுகள் குறிப்பிடுகின்றன. அவர்களின் ஒரு ராணி ayuta என்ற இடத்தில் இருந்து வந்தாராம். ஆனால் Ayuta தான் Ayodhaya-வா என்பதில் குழப்பம் இருக்கிறது.

அயோத்தியாவில் ராமர் கோவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறப்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் கொரியாவுக்கும் ராமர் கோவிலுக்கும் தொடர்பா? தென் கொரிய தூதர் சொல்வதென்ன?
தென் கொரியா : இந்த நாட்டில் இப்போது எல்லாருக்கும் ஓரிரு வயது குறைகிறது – எப்படி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com