இலங்கை அதிபரும் அரசாங்கமும் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் இன்று எச்சரித்து உள்ளார்.
மார்ச் 15 முதல் கொழும்பில் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இலங்கை அதிபர் ராஜினாமா செய்ய வேண்டுமென அவரது அலுவலகத்திற்கு எதிரே எதிர்க்கட்சிகளும் பெரும் திரளான பொது மக்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மின்சாரம், எரிபொருள், உணவு மற்றும் மருந்து அனைத்தும் நாடு முழுவதும் தட்டுப்பாடாக உள்ளது. தினசரி கூலி வேலை செய்பவர்கள் முதல் பிற தொழில் செய்பவர் வரை வாழ்வதற்கே சிரமப்படுகின்றனர். பணவீக்கம் 15% த்தை தொட்டு விட்டது. இது ஆசியாவிலேயே அதிகம்.
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அமைச்சரவை ராஜிநாமா செய்தது. நிலைமையை சமாளிக்க முடியாமல் இலங்கை மத்திய வங்கி ஆளுநரும் ராஜிநாமா செய்தார்.
இத்தகைய சூழலில் இன்று நான்காவது நாளாக நடைபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தசஜித் பிரேமதாச , ‘ஒன்று வழி நடத்துங்கள் அல்லது வழியை விட்டு வெளியேறுங்கள்’ என கேட்டுக்கொண்டார்.
மேலும் 6.9 மில்லியன் மக்கள் அதிபருக்கும், 6.8 மில்லியன் மக்கள் அரசாங்கத்திற்கும் வாக்களித்து இருப்பதை அரச தரப்பு உறுப்பினர்கள் மறந்து செயற்படக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவே மக்களின் தற்போதைய கோரிக்கைக்கு செவிசாய்த்து அதிபர் பதவி விலகாவிட்டால் அவருக்கு எதிராக தீமானம் கொண்டுவரப்போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.