இலங்கை புதிய அமைச்சரவை : ராஜபக்சே குடும்பத்தினர் ஓரங்கட்டப்படுகிறார்களா?

இந்நிலையில், புதிய நிதி அமைச்சராக பிரதமர் மகிந்தத ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகச் செய்தி விவரிக்கிறது.
ராஜபக்சே குடும்பத்தினர் ஓரங்கட்டப்படுகிறார்களா?
ராஜபக்சே குடும்பத்தினர் ஓரங்கட்டப்படுகிறார்களா?NewsSense

இலங்கையில் புதிதாக அமைய உள்ள அமைச்சரவையில் மகிந்தாவை தவிர யாருக்கும் பதவி வழங்கப்பட மாட்டாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

யார் யாருக்கு அமைச்சர் பதவி?

சமல் ராஜபக்ச , நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பமாட்டாது என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், புதிய நிதி அமைச்சராக பிரதமர் மகிந்தத ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகச் செய்தி விவரிக்கிறது.

அதே நேரம், ராஜபக்சவின் வேறு எந்த சகோதரர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NewsSense

நிதி அமைச்சர்கள்

பசில் ராஜபக்ச நிதி அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து அலி சப்ரி நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும் அலி சப்ரி 24 மணி நேரத்திற்குள் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அந்தவகையில், கடந்த இரண்டு நாட்களாக நாட்டில் நிதி அமைச்சர் பதவி வெற்றிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

NewsSense
Newssense

சாணக்கியன்

இதற்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பதாகை நேற்று இரவு முதல் மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகில் காணப்பட்டதாக தெரியவருகிறது.

அந்த பதாகையில் “புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள சாணக்கியன் இராசமாணிகத்திற்கு எமது நல்வாழ்த்துகள்” என எழுதப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com