தகிக்கும் இலங்கை : அடித்து நொறுக்கி, தீக்கிரையாக்கப்படும் ராஜபக்சே வீடுகள் - விரிவான தகவல்

இலங்கையில் அமைதியான முறையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக போராட்டங்களை முன்னெடுத்து வந்த ஆர்ப்பாட்டங்காரர்கள் மீது நேற்று சில இடங்களில் வன்முறை ஏவப்பட்டது.
தகிக்கும் இலங்கை : அடித்து நொறுக்கி, தீக்கிரையாக்கப்படும் ராஜபக்சே வீடுகள் - விரிவான தகவல்
தகிக்கும் இலங்கை : அடித்து நொறுக்கி, தீக்கிரையாக்கப்படும் ராஜபக்சே வீடுகள் - விரிவான தகவல்NewSense
Published on

இலங்கையில் அமைதியான முறையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக போராட்டங்களை முன்னெடுத்து வந்த ஆர்ப்பாட்டங்காரர்கள் மீது நேற்று சில இடங்களில் வன்முறை ஏவப்பட்டது.

இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் ஆட்சியாளர்கள் வீடுகளை தாக்க தொடங்கினர். பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடந்துள்ளது.

இது வரை 30க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கரையாக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஊடக தகவல் ஒன்று தெரிவிக்கிறது. அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியல் இதோ.

1-சனத் நிஷாந்தவின் வீடு

2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு

3-குருநாகல் மேயர் மாளிகை

4-ஜான்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்

5-மொரட்டுவை மேயர் மாளிகை

6-எம்பி அனுஷா பாஸ்குவலின் வீடு

7-பிரசன்ன ரணதுங்கவின் வீடு

8-ரமேஷ் பத்திரனவின் வீடு

9-சாந்த பண்டாரவின் வீடு

10-ராஜபக்சே பெற்றோரின் கல்லறை

11- நீர்கொழும்பில் உள்ள அவென்ரா கார்டன் ஹோட்டல்

12-அருந்திகாவின் வீடு

13-கனக ஹேரத்தின் வீடு

14-காமினி லொகுகேவின் வீடு

15-காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு

16-17 மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம் லான்சாவின் -2 வீடுகள்

18-வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு

19-யானை சபர் வீடு

20-பந்துல குணவர்தன வீடு

21. வீரகெட்டிய மெதமுலன வீடு

22.கேகல்ல மஹிபால ஹேரத் ஹவுஸ்

23-கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம்

24-கம்பஹா நாலக கொடஹேவா இல்லம்

25- விமல் வீரவன்சவின் வீடு இரவு

26-அசோசியேட் சூப்பர் சென்டர் காலி இரவு

27- சிறிபாலகம்லத் வீடு இரவு

28- கெஹலிய ரபுக்வெல்ல வீடு இரவு

29-ரோஹித அபேகுணவர்தன இல்லம்

30-நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல்

31-காஞ்சனா விஜேசேகர இல்லம் இரவு

32-துமிந்த திசாநாயக்க வீடு

33-அலிசப்ரி ரஹீம் வீடு (புத்தளம்)

34 - விமலவீர திஸ்ஸாநாயக்க

பொதுஜன பெரமுன கட்சி

கண்டியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கெஹலிய ரம்புக்வெல்லவின் (Keheliya Rambukwella) இல்லம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மகிந்த ஆதரவாளர் வீட்டிற்கு தீ வைப்பு

மைனா கோ கமயில் இடம்பெற்ற போராட்டத்தின் போது இளம் பெண் ஒருவரை கடுமையாக தாக்கிய மஹிந்தவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அலி சப்ரி வீடு

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீது மர்ம நபர்களால் நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான அலிசப்ரி ரஹீம், கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் தேசிய கட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் முழுமையான அரசு ஆதரவாளராக அவர் மாறி பக்சேகளை ஆதரித்து வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.


Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com