Starbucks: காபி ஷாப் ஊழியராக மாறப்போகும் ஸ்டார்பக்ஸ் புதிய CEO லக்ஷ்மன் நரசிம்மன்- ஏன்?

முன்னாள் சிஇஓ-வாக இருந்த ஹாவர்டு ஷுல்ட்ஸ் என்பவர் பதவி விலகிய பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் நரசிம்மனை அடுத்த சிஇஓ-வாக அறிவித்தது நிறுவனம். இவர் ஏப்ரல் மாதம் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு வாரங்கள் முன்னதாகவே பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
Starbucks: காபி ஷாப் ஊழியராக மாறப்போகும் ஸ்டார்பக்ஸ் புதிய சி இ ஓ லக்ஷ்மன் நரசிம்மன்- ஏன்?
Starbucks: காபி ஷாப் ஊழியராக மாறப்போகும் ஸ்டார்பக்ஸ் புதிய சி இ ஓ லக்ஷ்மன் நரசிம்மன்- ஏன்?Twitter
Published on

மாதம் ஒரு முறை காபி ஷாப்களில் பணியாற்றப் போவதாக தெரிவித்திருக்கிறார் ஸ்டார்பக்ஸின் புதிய சிஇஓ லக்ஷ்மன் நரசிம்மன்.

இந்தியாவின் பூனே பகுதியை சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் கடந்த மார்ச் 21ஆம் தேதி ஸ்டார்பக்ஸின் சி இ ஓவாக பதவியேற்றார். இவர் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவிலும் அங்கம் வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் சி இ ஓவாக இருந்த ஹாவர்டு ஷுல்ட்ஸ் என்பவர் பதவி விலகிய பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் நரசிம்மனை அடுத்த சி இ ஓ வாக அறிவித்தது நிறுவனம். இவர் ஏப்ரல் மாதம் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு வாரங்கள் முன்னதாகவே பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

பதவியேற்றவுடன் முதல் முடிவாக, மாதம் ஒரு முறை ஸ்டார்பக்ஸ் காபி ஷாப்பில் பரிஸ்டாவாக பணியாற்றப்போவதாக தெரிவித்திருக்கிறார் நரசிம்மன்

காபி ஷாப்களில் வாடிக்கையாளர்களுக்கு காபி சப்ளை செய்பவர்களை பரிஸ்டா எனக் குறிப்பிடுவோம். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தனது கடமையை திறம்பட செய்வேன் எனவும் ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

Starbucks: காபி ஷாப் ஊழியராக மாறப்போகும் ஸ்டார்பக்ஸ் புதிய சி இ ஓ லக்ஷ்மன் நரசிம்மன்- ஏன்?
Neal Mohan: ஆண்டுக்கு 57 ஆயிரம் கோடி வருமானம்; Youtube CEO பதவியில் இந்தியர்- யார் இவர்?

மேலும் அந்த கடிதத்தில், “என்னை உங்கள் நிறுவனத்திற்குள் வரவழைத்து, எனக்கு வேலை என்ன, நமது வணிகம் என்ன என்பதனை நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். நமக்கான வாய்ப்புகள் என்னென்ன, நாம் சந்திக்கவிருக்கும் சவால்கள் என்ன என்பதை உங்களின் வழிகாட்டுதல்களின் பேரில் நான் புரிந்துகொண்டேன்.

நம் நிறுவனத்தின் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமலும், வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய உறவை தக்கவைப்பதற்காகவும், நான் பதவியேற்ற பிறகும், மாதம் ஒரு முறை, அரை நாளுக்கு நான் இங்கு பரிஸ்டாவாக பணியாற்றுவேன் எனக் கூறியுள்ளார் லக்ஷ்மன்.

Starbucks: காபி ஷாப் ஊழியராக மாறப்போகும் ஸ்டார்பக்ஸ் புதிய சி இ ஓ லக்ஷ்மன் நரசிம்மன்- ஏன்?
Starbucks CEO ஆக பதவியேற்ற இந்தியர் - யார் இந்த லக்ஷ்மன் நரசிம்மன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com