Steve Harvey: 30 வயதில் காலி பர்ஸ்; இப்போது ரூ.16,000 கோடி சொத்து- ஊர்குருவி பருந்தான கதை!

மாதா மாதம் சம்பளம் கிடைத்தாலும் வாழ்க்கை என்பது சம்பளத்துக்கு உழைப்பது அல்ல, கனவுக்காக உழைப்பது என அவர் நம்பினார்.
Steve Harvey: 30 வயதில் காலி பர்ஸ்; இப்போது ரூ.16,000 கோடி சொத்து- ஊர்குருவி பருந்தான கதை!
Steve Harvey: 30 வயதில் காலி பர்ஸ்; இப்போது ரூ.16,000 கோடி சொத்து- ஊர்குருவி பருந்தான கதை!Twitter

அமெரிக்காவின் மிகச் சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் ஸ்டீவ் ஹார்வி பற்றி அறியாதவர்கள் யாருமில்லை. குறைந்தபட்சம் ஒரு ரீல்ஸ் அல்லது ஷார்ட் வீடியோவிலாவது அவரை கண்டிருப்போம்.

இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றாலும் உலகில் பல கோடி பேரை சிரிக்க வைப்பவராக இருக்கிறார். ஹார்வி வெற்றியின் ரகசியம் கூட அது தான். அவர் எபோதுமே எல்லைகள் இல்லாமல் பெரிதாக சிந்தித்திருக்கிறார்.

அதனால் தான் ஒரு சாதாரணக் கறுப்பினக் குடும்பத்தில் பிறந்த ஸ்டீவ் இப்போது 200 மில்லியன் டாலர் சொத்துகளுடன் ஒரு பணக்கார மில்லியனராக இருக்கிறார்.

ஸ்டீவ் ஹார்வியின் குழந்தைப் பருவம்

17 ஜனவரி 1957ல் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள வெல்ச் என்ற இடத்தில் இலோய்ஸ் ஹார்வி மற்றும் ஜெஸ்ஸி ஹார்வி தம்பதிக்கு பிறந்தார்.

கறுப்பின சிறுவனக பல ஏக்கங்களுடனும் கனவுகளுடனும் வளர்ந்த ஸ்டீவ் தனது இலக்கை மிகச் சிறிய வயதிலேயே நிர்ணயித்து விட்டார்.

அவரது பள்ளியில் ஒரு காகிதத்தில் பெயர் மற்றும் வருங்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள் என்பதை எழுதித்தருமாறு அவரது ஆசிரியர் கேட்டுள்ளார்.

அப்போது நான் தொலைக்காட்சியில் பணியாற்ற வேண்டும் என ஸ்டீவ் எழுதியிருக்கிறார்.

மற்ற மாணவர்கள் டாக்டர், எஞ்சினியர், கூடைப்பந்து வீரர், கால்பந்து வீரர் என பிடித்தமான தொழில்களை எழுதியிருக்கின்றனர்.

அனைத்தையும் வாசித்த ஆசியரியர் இறுதியாக ஸ்டீவ் ஹார்வியை முன்னுக்கு வந்து நிற்குமாறு அழைத்தார்.

சிறுவன் ஹார்வி "நாம் சிறந்த பதிலை எழுதியிருக்கிறோம்" என எண்ணி முன்னுக்கு சென்றார்.

ஆனால் ஆசிரியையோ ஹார்வியை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்திவிட்டார். "உன்னால் ஒரு நாளும் தொலைக்காட்சியில் வர முடியாது" என அழுத்தமாகக் கூறினார்.

ஹார்வி சிறுவயது முதலே தடுமாற்றம் கொண்ட ஒருவராக வளர்ந்தார். அவரது தயக்கம் காரணமாகவே அவரது ஆசிரியை அப்படிக் கூறினார்.

அந்த கணம் முதல் ஆசிரியர் கூறியதைப் பொய்யாக்குவது தான் தனது குறிக்கோள் என உறுதிபூண்டார் ஹார்வி.

மாதா மாதம் சம்பளம் கிடைத்தாலும் வாழ்க்கை என்பது சம்பளத்துக்கு உழைப்பது அல்ல, கனவுக்காக உழைப்பது என அவர் நம்பினார்.

கடினமான இளமைக்காலம்

பள்ளியில் எடுத்த உறுதியின் படி ஹார்வி தொலைக்காட்சி வேலைக்கு செல்லவில்லை. தனது கல்லூரிப் படிப்பை முடித்தவர், வாகனம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டார்.

சில காலத்தில் அங்கிருந்து வெளியேறி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். எந்த பணியும் ஹார்விக்கு நிறைவைத் தரவில்லை.

மாதா மாதம் சம்பளம் கிடைத்தாலும் வாழ்க்கை என்பது சம்பளத்துக்கு உழைப்பது அல்ல, கனவுக்காக உழைப்பது என அவர் நம்பினார்.

தரை விரிப்பானை சுத்தம் செய்பபவராகவும், குத்துச்சண்டை வீரராகவும் கூட இருந்திருக்கிறார் ஹார்வி. ஆனாலும் அவருக்கு தேவையான புகழும், மகிழ்ச்சியும், நிம்மதியும் அவருக்கு கிடைக்கவில்லை.

தனது 27 வயதில் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் வேலையை விட்டுவிட்டு முழுநேர காமடியனாக களமிறங்கினார் ஹார்வி. அடுத்த மூன்று ஆண்டுகள் அவரது வாழ்க்கை சகிக்க முடியாத துன்பங்களைக் கொடுத்தது.

அவர் வீடு கூட இல்லாத நபராக சுற்றித்திரிந்தார். அவரிடம் இருந்த பழைய காரிலேயே தங்கிவந்தார்.

3 ஆண்டுகள் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவுமே இல்லாத கனவை மட்டும் துரத்திக்கொண்டிருந்த வாழ்க்கை.

தினமும் ஹோட்டல்களில் இருக்கும் குளியலறையையே பயன்படுத்தி வந்தார். அங்கு தான் அவருக்கு இலவசமாக சுடு தண்ணி கிடைக்கும்.

எப்போதும் அங்கிருக்கும் கொஞ்சம் துணிகாளை எடுத்து வந்து சுடு தண்ணியில் நனைத்து உடலை தேய்த்துக்கொள்வார். பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் வெளியில் சென்று காய்ந்த துண்டை எடுத்து வந்து துடைத்துக்கொள்வார்.

அப்படி ஒரு நாள் ஈர துண்டுகளை வைத்து உடலைத் தேய்த்துவிட்டு, சோப்பு போட்டுக்கொண்டார்.

அப்போது அங்கு தொழிலதிபர்கள் சந்திப்பு நடைபெற்றதால் கூட்டம் அதிகமாக இருந்தது. வெளியில் சென்று காய்ந்த துண்டை எடுக்க முடியவில்லை.

அப்போது கழிவறை இருக்கையிலேயே உட்கார்ந்து உடைந்து அழத்தொடங்கினார் ஹார்வி.

அங்கிருந்து வெளியில் வந்ததும் இனி ஒரு நாள் கூட இந்த வாழ்க்கையை வாழக்கூடாது என முடிவு செய்தவர் அப்பாவை அழைத்தார்.

"புதிதாக வேலை கிடைக்கும் வரை 4 மாதங்கள் மட்டும் வீட்டில் தங்கிக்கொள்கிறேன்" எனக் கேட்ட கோரிக்கையை அப்பட்டமாக மறுத்தார் அப்பா.

கடவுள் திறக்கும் கதவுகள்

ஆன்ஸர் மிஷின் என்ற அந்த காலத்து கருவியில் அப்போது ஸ்டீவ் ஹார்விக்கு ஒரு குரல் பதிவு வந்திருந்தது. அதில் அப்பல்லோ தொலைக்காட்சியில் இருந்து ஒரு பதிவு வந்திருக்கிறது.

அதில் "உங்களது காமடி நிகழ்ச்சி ஒன்று பார்த்தோம். வரும் ஞாயிறு நீங்கள் நியூயார்க் வந்தால் உங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறோம்" எனக் கூறியிருந்தனர்.

அது ஒரு வியாழக்கிழமை. அப்போது ஹார்வியின் கையில் இருந்தது 35 டாலர்கள் மட்டுமே. அதை வைத்துக்கொண்டு நியூயார்க் செல்வது நடக்காத காரியம்.

ஹார்விக்கு வாய்ப்பு கைக்கு எட்டும் போதே 30 வயதாகியிருந்தது ஆனால் அதுவும் கைக்கூடச் செய்ய பணமில்லை.

அந்த நேரத்தில் ஆன்ஸரிங்க் மிஷின் மற்றொரு வாய்ஸ் நோட்டைக் கொடுத்தது. அது காமடி கேரவன் என்ற அரங்கில் இருந்து வந்தது.

அவர்கள் ஹார்வியை வெள்ளிக்கிழமை இரவு ஒரு காமடி நிகழ்ச்சிக்கு புக் செய்தனர். அதற்கு 150 டாலர்கள் சம்பளம் தருவதாகவும் கூறினர்.

ஹார்வி ஃபுளோரிடா சென்றதும் காமடி கேரவன் நிர்வாகம் அவரை அடுத்த இரவும் அங்கு ஸ்டாண்ட் அப் காமடி செய்ய அழைத்தனர்.

சனிக்கிழமை இரவு நிகழ்ச்சிக்கு பின்னர் ஹார்வியின் கையில் 300 டாலர்கள் இருந்தது. அவர் அவரது கனவை நோக்கி நியூயார்க் செல்லும் விமானத்தில் பறந்தார்.

அப்பல்லோவின் நிகழ்ச்சியில் ஹார்விக்கு கடுமையான போட்டி நிலவியது. அமெரிக்காவின் புகழ்பெற்ற காமடியன்கள் அங்கு வந்திருந்தனர்.

ஆனால் அவர்கள் யாருடைய நகைச்சுவையும் அங்கிருந்த கல்லூரி மணவர்களை சிரிக்க வைக்கவில்லை.

அந்த நேரத்தொல் சாதுர்யமாக செயல்பட்ட ஸ்டீவ் ஹார்வி அப்போது கல்லூரி மாணவர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த மைக் டைசனை வைத்து ஒரு நகைச்சுவையை யோசித்தார்.

மைக்டைசனிடம் அடிவாங்கியவரின் வீங்கிப்போன கண்கள் பேசுவதாக அந்த நகைச்சுவை அமைந்திருக்கும்.

அந்த நகைச்சுவையைக் கூறியதும் அங்கிருந்த மாணவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

Steve Harvey: 30 வயதில் காலி பர்ஸ்; இப்போது ரூ.16,000 கோடி சொத்து- ஊர்குருவி பருந்தான கதை!
Dhoni : "Play-off போகலைன்னா உலகம் அழிஞ்சிடாது" வெற்றி குறித்து தோனி கூறியது என்ன?

வெற்றி என்பது இது தான்

எவ்வளவு கடினமாக சூழலைக் கடந்து வந்தாலும் ஸ்டீவ் தனது சாதுர்யத்தையும் நகைச்சுவையை உருவாக்கும் திறனையும் காத்து வந்தார். அது தான் இன்று அவர் வாழும் வெற்றிகரமான வாழ்க்கையை அவருக்கு பரிசலித்திருக்கிறது.

அவர் ஃபாமிலி ஃபுட் (Family Feud), லிட்டில் பிக் ஷாட்ஸ், ஷோ டைம் அட் தி அப்பல்லோ போன்ற புகழ் பெற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

பிறகு அவரது பெயரிலேயே ஸ்டீவ் ஹார்வி ஷோ என ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். எல்லாமும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

உலக அழகி போட்டியைக் கூட ஒரு முறை ஹோஸ்ட் செய்திருக்கிறார். இப்போது உலகில் இருக்கும் அனைவருக்குமே உந்துதலாக இருந்து வருகிறார்.

Steve Harvey: 30 வயதில் காலி பர்ஸ்; இப்போது ரூ.16,000 கோடி சொத்து- ஊர்குருவி பருந்தான கதை!
Frederic Tudor: தொட்டதெல்லாம் தோல்வி; எத்திசைக்கும் ஏமாற்றம் - உலகின் ஐஸ் ராஜா வென்ற கதை!

ஸ்டீவ் ஹார்வி எழுதிய Act like a lady, think like a man புத்தகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று அந்த ஆண்டின் பெஸ்ட் செல்லரானது. Jump: Take the Leap of Faith to Achieve Your Life of Abundance, Straight Talk, No Chaser, Act Like a Success, Think Like a Success போன்ற புத்தகங்களும் பெறு வெற்றிப்பெற்றன.

கடந்த 2017ல் ஸ்டீவ் ஹார்வி குளோபல் எண்டர்டெயின்மென்ட் கம்பனி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

இப்போது ஒவ்வொரு ஆண்டும் ஸ்டீவ் ஹார்வி 45 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கிறார். இந்திய மதிப்பில் சுமார் 365 கோடி.

ஒரு நாளுக்கு ஒரு கோடி.

இவ்வளவு பணமும் அவரது வெற்றியில்லை. துன்பங்களையும் தோல்விகளையும் கண்டு துவளாத அவரது வாழ்க்கையைப் பற்றி நாம் பேசுவதும், அதனைப் பாடமாகக் கொண்டு நம் வெற்றிப்பாதையைத் தொடருவதும் தான் அவரது வெற்றி.

ஸ்டீவ் ஹார்வி தன்னை பின்பற்றுபவர்களை ஊக்குவிக்கும் விதமாக தினமும் அனுபவங்களையும் வார்த்தைகளையும் ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.

https://twitter.com/IAmSteveHarvey

ஒரு சுவாரஸ்ய தகவல். ஸ்டீவ் ஹார்வி இப்போது வரை அவரது ஆசிரியருக்கு ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும் பரிசாக ஒரு தொலைக்காட்சியை கொடுத்து வருகிறார். ஏனெனில் அதில் தான் அவரது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.

சிறு வயதில் தன்னால் முடியாது என ஆசிரியர் கூறியதை பொய்யாக்கிவிட்டதை ஒவ்வொரு முறையும் நினைவுப்படுத்தவே ஹார்வி இதை செய்து வருகிறார்

Steve Harvey: 30 வயதில் காலி பர்ஸ்; இப்போது ரூ.16,000 கோடி சொத்து- ஊர்குருவி பருந்தான கதை!
LULU யூசுஃப் அலி : அரபு நாடுகளில் கொடிக்கட்டி பறக்கும் ஓர் இந்தியரின் வெற்றி கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com