36 மாடிகள், 30,000 பேர் - சீனாவின் ’மினி சிட்டி’ என்றழைக்கப்படும் கட்டடம் பற்றி தெரியுமா?

சீனா போன்ற நாடுகள், இதுபோல ஹை ரைஸ் கட்டிடடங்கள் இருப்பது சாதாரணம் தான் என்றாலும், இங்கு வாழ்ந்து வரும் மக்களின் எண்ணிக்கை தான் நம்மை வாய்பிளக்க வைக்கிறது.
36 மாடிகள், 30,000 பேர் - சீனாவின் ’மினி நகரம்’ என்றழைக்கப்படும் இந்த இடம் பற்றி தெரியுமா?
36 மாடிகள், 30,000 பேர் - சீனாவின் ’மினி நகரம்’ என்றழைக்கப்படும் இந்த இடம் பற்றி தெரியுமா?twitter

கிட்ட தட்ட ஒரு நகரத்தில் வசிக்கக்கூடிய அளவு மக்கள், சீனாவின் இந்த கட்டடத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

வித்தியாசமான, மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட கட்டிடக்கலைக்காக பெயர் பெற்ற நாடுகளில் ஒன்று சீனா. அப்படிப்பட்ட ஒரு கட்டடத்தை பற்றி தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

சீனாவின் ஹாங்சூ என்ற இடத்தில் அமைந்திருக்கிறது ரிஜெண்ட் இண்டர்னேஷனல் அடுக்குமாடி குடியிருப்பு. இதில் மொத்தம் 36 மாடிகள் உள்ளன.

சீனா போன்ற நாடுகள், இதுபோல ஹை ரைஸ் கட்டடடங்கள் இருப்பது சாதாரணம் தான் என்றாலும், இங்கு வாழ்ந்து வரும் மக்களின் எண்ணிக்கை தான் நம்மை வாய்பிளக்க வைக்கிறது.

இந்த கட்டடம் S வடிவத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 30,000. ஒரு மினி நகரமாகவே காட்சியளிக்கும் இந்த கட்டிடம், கடந்த 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

அந்த சமயத்தில் இங்கு வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஆகும்.

36 மாடிகள், 30,000 பேர் - சீனாவின் ’மினி நகரம்’ என்றழைக்கப்படும் இந்த இடம் பற்றி தெரியுமா?
வட கொரியா: ரூ.16 ஆயிரம் கோடி ஓட்டலுக்கு 25 ஆண்டுகளாக விருந்தினர்களே இல்லை! என்ன காரணம்?

முன்பு ஓட்டலாக செயல்பட்ட இந்த கட்டிடத்தை தற்போது குடியிருப்பு பகுதியாக மாற்றியுள்ளனர்.

இந்த 36 மாடி கட்டடம் சுமார் 206 மீ உயரம் கொண்டது. ஒரு மிகப்பெரிய உணவு விடுதி, நீச்சல் குளம், பியூட்டி பார்லர் மற்றும் முடிதிருத்தம் செய்ய சலூன், பல்பொருள் அங்காடி, இணைய வசதி மையம் இந்த கட்டிடத்தில் உள்ளன. மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அனைத்து வசதிகளும் இங்கு இருக்கிறது.

இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர் அலிசியா லூ. இவர் உலகின் 2வது பெரிய செவன் ஸ்டார் ஓட்டலான தி சிங்கப்பூர் சான்ட்ஸ் ஓட்டலை கட்டமைத்தவர் ஆவார்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இளம் தலைமுறையினர் தான் என்கின்றன சீன பத்திரிகைகள்.

சீன செய்தி நிறுவனமான சினாவின்படி, ஜன்னல்கள் இல்லாத சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளின் வாடகை மாதத்திற்கு சுமார் 1,500 RMB ($220). அதே சமயம் பால்கனிகளைக் கொண்ட பெரிய வீடுகளின் வாடகை மாதத்திற்கு 4,000 RMB (550 USD) வரை வசூலிக்கப்படுகிறது.

36 மாடிகள், 30,000 பேர் - சீனாவின் ’மினி நகரம்’ என்றழைக்கப்படும் இந்த இடம் பற்றி தெரியுமா?
1,375 அடி ஆழம்; உலகின் முதல் பாதாள ஓட்டல் - ஒரு இரவுக்கு கட்டணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com