எஸ்கலேட்டர்களில் இருக்கும் பிரஷுக்கு இது தான் காரணமாம். அவை ஷூ க்ளீன் செய்ய இல்லை...
பெரிய பெரிய மால்களில், சினிமா தியேட்டர்களுக்கு எல்லாம் சென்றால் அங்கு நாம் எஸ்கலேட்டர்களை பார்க்கமுடியும். இந்த நகரும் மின் படிக்கட்டானது, பலருக்கு ஆர்வத்தையும், பலருக்கு பயத்தையும் தூண்டும்.
ஓரிடத்தில் நின்றுக்கொண்டிருக்கும் படிக்கட்டுகள் நகர்ந்தால் தலைச்சுற்றுமல்லவா? அதிலும் குறிப்பாக, இந்த படிக்கட்டுகளில் கவனமாக கால் வைக்கவேண்டும்.
ஒரு படி முடியும் இடத்தில் மஞ்சள் அல்லது கருப்பு நிறத்தில் கோடு இருக்கும். அது அடுத்த படி தொடங்குவதற்கான எல்லை.
அதன் மீது கால் வைத்து ஏறினால், கீழ்ழே விழுந்துவிடுவோம். ஆனால் புதிதாக எஸ்கலெட்டர் மீது ஏறுபவர்கள் எல்லாம் அதன் மீது தான் காலை வைப்போம். சில சமயம் பழக்கப்பட்டவர்கள் கூட!
இந்த படிக்கட்டுகள் மேல் நோக்கியும் கீழேயும் செல்லும். இதனை நாம் ஆபரேட் செய்துகொள்ளலாம்.
அதை தவிர அதற்காக தனியாக ஸ்விட்ச் ஒன்று இருக்கும். மனித நடமாட்டம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கிறதென்றால் நின்றுக்கொண்டிருக்கும் இந்த படிகள் தானியங்கி முறையில் நகரத் தொடங்கும் (மனிதர்கள் பொத்தானை ஆஃப் செய்யாத பட்சத்தில்)
இந்த படிகளின் ஓரங்களில் பிரஷ் இருக்கும். அவை கால்களில் பட்டால் கூசும். அவற்றை பலரும், நமது காலணிகளை சுத்தம் செய்யும் கருவி என நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
அது தான் இல்லை!
நைலானால் ஆன இந்த தூரிகைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக எஸ்கலேட்டர்களில் வைக்கப்பட்டிருக்கின்றன.
நாம் அணிது செல்லும் ஆடைகள், ஷூக்களில் இருக்கும் லேஸ் அல்லது நமது சாக்ஸ் போன்றவை, எஸ்கலெட்டர்களின் இடுக்குகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவே இவை பொறுத்தப்பட்டுள்ளன. ஆடைகள் இடுக்குகளில் சிக்கினால், இந்த நகரும் படிக்கட்டில் நாம் மாட்டிக்கொண்டு தலைக்குப்புற விழ வேண்டியது தான்
இவ்வாறான விபத்துக்ளை தடுக்கவே இவை வைக்கப்பட்டுள்ளன. Untold Facts என்ற டிக் டாக் பக்கம் இந்த விளக்கத்தை அளித்திருந்தது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust