பாப்லோ எஸ்கோபார் : நார்கோஸ் - நெட்பிலிக்ஸ் சீரியலாக வரும் அளவிற்கு என்ன செய்தார்?| பாகம் 2

ஒரு இளைஞனாக இருக்கும் போதே எஸ்கோபார் கொலம்பியாவின் ஜனாதிபதியாக விரும்புவதாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கூறினார். ஆனால் அவரது செல்வமும், ஆளுமையும் ஒரு குற்றப்பாதையின் மூலம் உருவானதாக இருந்தது.
Pablo Escobar

Pablo Escobar

Facebook

Published on

ஒரு இளைஞனாக இருக்கும் போதே எஸ்கோபார் கொலம்பியாவின் ஜனாதிபதியாக விரும்புவதாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கூறினார். ஆனால் அவரது செல்வமும், ஆளுமையும் ஒரு குற்றப்பாதையின் மூலம் உருவானதாக இருந்தது.

1982 இல் எஸ்கோபார் கொலம்பியா நாட்டு காங்கிரஸின் மாற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அப்போதும் அவரது குற்றப் பின்னணி கொண்ட சொத்திற்கான காரணங்கள் மறைக்கப்படவில்லை. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எஸ்கோபரின் குற்றப் பின்னணியை வெளிப்படுத்திய நீதித்துறை அமைச்சர் பின்னர் கொல்லப்பட்டார்.

எஸ்கோபரின் பயங்கரவாத நடவடிக்கைகள்

எஸ்கோபரின் பயங்கரவாத நடவடிக்கைகள்

Twitter

பாப்லோ எஸ்கோபார் எத்தனை பேரைக் கொன்றார்?

அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதற்கு எஸ்கோபார்தான் பொறுப்பு. இந்தக் கொலைகளை ஈவிரக்கமில்லாமல் அவர் நடத்தினார்.

தான் கொலம்பியா அதிபராக பதவியேற்க முடியாது என்று எஸ்கோபாருக்கு தெரிந்த நேரம் அமெரிக்காவும் அவரை பிடித்து நாடு கடத்துவதற்கு அழுத்தம் கொடுத்தது. அப்படி நடக்கக் கூடாது என்பதற்காக கொலம்பிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் வண்ணம் பல எதிரிகள் மீது தனது கோபத்தைக் காட்டினார். அவரது இலக்கு குற்றவாளிகளை நாடு கடத்தும் சட்டப்பிரிவு கைவிடப்பட வேண்டும், போதைபொருள் வர்த்தகத்தில் இருந்து விலகிக் கொள்ளும் நபர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.

எஸ்கோபரின் பயங்கரவாத நடவடிக்கைகள் மூன்று கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர்கள், ஒரு அட்டர்னி ஜெனரல், ஏராளமான நீதிபதிகள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளின் உயிரைக் கொன்றது. கூடுதலாக, 1989 இல் கொலம்பிய ஜெட்லைனர் மீது குண்டுவீசி 100 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதற்கு எஸ்கோபார் மூளையாகச் செயல்பட்டார்.

எஸ்கோபரின் பயங்கரவாதம் இறுதியில் பொதுக் கருத்தை அவருக்கு எதிராகத் திருப்பியது. மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கூட்டணியை உடைத்தது.

Pablo Escobar

அமெரிக்கா - கனடா எல்லையை கடக்க முயன்று பனியில் இறந்த 3 வயது குழந்தை உள்பட 4 இந்தியர்கள்

Pablo Escobar's jail

Pablo Escobar's jail

Facebook

எஸ்கோபார் உருவாக்கிய லா கேட்ரல் ஆடம்பரச் சிறை

ஜூன் 1991 இல், எஸ்கோபார், கொலம்பிய ஜனாதிபதி சீசர் கவிரியாவின் அரசாங்கத்திடம் சரணடைந்தார்.

இதற்கு பதில் அரசாங்கம் அவரை நாடு கடத்தும் அச்சுறுத்தலை திரும்பப் பெற்றது. மேலும் எஸ்கோபார் அவருடைய ஆடம்பரச் சிறையான லா கேட்ரலை உருவாக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டார். அந்த சிறையை அவருடைய அடியாட்கள்தான் பாதுகாத்தனர். சிறை என அழைக்கப்பட்ட அந்த மாளிகையில் அழகு நிலையம், சூதாட்ட கிளப்புகள், இரவு விடுதி என அத்தனை வசதிகளும் இருந்தன.

இருப்பினும் ஜூன் 1992-இல், சிறைத்துறை அதிகாரிகள் அவரை வழமையான சிறைக்கு மாற்ற முயன்ற போது எஸ்கோபார் தப்பினார். தப்பிச் சென்ற போதைப் பொருள் மன்னனை பிடிக்கும் 16 மாத தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.

இந்த தேடுதல் வேட்டையின் போது போலீஸ் அலுவலகங்களைத் தாக்கி அதன் அதிகாரிகளைக் கொன்றதால் எஸ்கோபாரின் மெடலின் கார்டெல்லின் ஏ கபோகம் சிதைவடையத் துவங்கி மோசமடைந்தது.

Pablo Escobar Death

Pablo Escobar Death

Twitter

எஸ்கோபாரின் இறப்பு

அப்போது எஸ்கோபாரின் குடும்பம் ஜெர்மனிக்கு தப்பிச் சென்று புகலிடம் கோரியது தோல்வியில் முடிந்தது. இறுதியில் எஸ்கோபாருக்கு அவ்வளவு அதிர்ஷடம் கிடைக்கவில்லை. இறுதியாக கொலம்பிய போலீஸ் - இராணுவ கூட்டுப்படையினர் டிசம்பர் 2, 1993 அன்று மெடலினில் உள்ள ஒரு நடுத்தர வர்க்க குடியிருப்பில் தப்பியோடிய எஸ்கோபரைப் பிடித்தனர்.

எஸ்கோபார் தப்பிக்க முயன்றபோது நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவரும், அவரது மெய்க்காப்பாளரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Pablo Escobar Death

Pablo Escobar Death

Facebook

எஸ்கோபரின் மரணத்திற்குப் பிறகு

எஸ்கோபாரின் மரணம் மெடலின் கார்டெல் மற்றும் கோகோயின் வர்த்தகத்தில் கொலம்பியாவின் முக்கிய பங்கின் அழிவை துரிதப்படுத்தியது.

அவரது சாவை அந்நாட்டு அரசும் உலகின் பிற பகுதிகளும் கொண்டாடின. அவரது குடும்பத்தினர் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர்.

இருப்பினும், பல கொலம்பிய மக்கள் அவரது கொலைக்கு இரங்கல் தெரிவித்தனர். 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் எஸ்கோபரின் இறுதி அடக்க நிகழ்ச்சிக்கு வந்தனர்.

"அவர் வீடுகளைக் கட்டினார் மற்றும் ஏழைகள் மீது அக்கறை காட்டினார்," என்று ஒரு இறுதி ஊர்வலம் செல்பவர் ஒருவர் எஸ்கோபரின் இறுதிச் சடங்கில் கூறியதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

El Patrón del Mal Tv Series

El Patrón del Mal Tv Series

Twitter

எல் பேட்ரான் டெல் மால் டிவி சீரியலில் எஸ்கோபார்

எஸ்கோபாரின் பிரபலமான வரலாற்றை 2012 ஆம் ஆண்டு கொலம்பிய தொலைக்காட்சி சிறு தொடராக எல் பேட்ரான் டெல் மால் என்ற தலைப்பில் வெளியிட்டது.

இந்த நிகழ்ச்சியை காமிலோ கானோ மற்றும் ஜுவானா யூரிப் ஆகியோர் தயாரித்தனர். இருவரும் எஸ்கோபார் அல்லது அவரது உதவியாளர்களால் கொலை செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்டிருந்தனர்.

நார்கோஸ் - நெட்பிலிக்ஸ் சீரியல்

நார்கோஸ் - நெட்பிலிக்ஸ் சீரியல்

Facebook

நார்கோஸ் - நெட்பிலிக்ஸ் சீரியல்

எஸ்கோபரை வேட்டையாடுவதில் உதவிய இரண்டு அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க முகவர்கள், ஸ்டீவ் மர்பி மற்றும் ஜேவியர் பெனா, இருவரும் எஸ்கோபார் வழக்கில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். இவர்களின் கதை 2015 நெட்பிலிக்ஸ் தொடரான நார்கோஸின் ஒரு பகுதியாக அமைந்தது.

2016 ஆம் ஆண்டில், எஸ்கோபரின் சகோதரர் ராபர்டோ, நெட்ஃபிலிக்ஸ் அதன் நர்கோஸ் தொடரில் தங்கள் குடும்பத்தை தவறாக சித்தரித்ததற்காக1 பில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடரத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

ராபர்ட்டோ ஒரு கணக்காளராக எஸ்கோபாரின் போதைப் பொருள் கும்பலின் பணியாற்றினார். ஆனால் நெட்பிலிக்ஸ் சீரியலில் அவர் எஸ்கோபாரின் குடும்ப உறுப்பினர் இல்லை என்பதோடு, அவர் காட்டிக் கொடுக்கும் சிஐஏ முகவராக மாறியதாகவும் காட்டப்படுகிறது. ஆனாலும் ராபர்ட்டோ தனது வழக்கு முயற்சியை பின்னர் கைவிட்டார்.

மெக்சிகோவின் போதை பொருள் மாஃபியா எல் சாப்போவுக்கு முன்னோடியாக இருந்த எஸ்கோபார் பல போதைப் பொருள் கடத்தல் மாஃபியாக்களுக்கு ஆதர்சமாக இருந்தார். இரக்கமின்றி யாரையும் கொலை செய்வது, பணத்தின் மீதான வெறி, தன்னை எதிர்க்கும் உயர்மட்ட அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் அனைவரையும் குறிவைத்துக் கொல்வது என தனது ஆளுமையை வடிவமைத்துக் கொண்டார். இன்னொரு புறம் ஏழைகளுக்கு உதவி செய்வது என்று தன்னை ராபின் ஹூட்டாக காண்பித்துக் கொண்டார். இருப்பினும் அவரது கொலைக்கணக்கு அவரது பிம்பத்தை மாற்றி அமைத்தது. தனக்கென ஒரு மாளிகைச் சிறையை வடிவமைத்துக் கொண்டார் என்றால் கொலம்பிய அரசாங்கத்தின் பரிதாப நிலையை உணரலாம். இத்தகைய அரசுகளும், அரசுத் தலைவர்களுமே இப்படியான போதைப் பொருள் கடத்தல் காரர்கள் வளர்வதற்கு காரணமாக இருக்கிறார்கள்.

- முற்றும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com