ட்விட்டர் லோகோவை X என மாற்றும் எலான் மஸ்க் - பின்னால் இருக்கும் Flash back பற்றி தெரியுமா?

ஏற்கெனவே ட்விட்டரின் அடையாளமான நீலக் குருவி லோகோவுக்குப் பதிலாக டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் நாய் படத்தை லோகோவாக வைத்தார். தற்போது ட்விட்டர் லோகோவை "எக்ஸ்" என மறுபெயரிடுவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் ட்விட்டரின் புதிய லோகோ 1999இலேயே, பயன்படுத்த நினைத்தது என எத்தனை பேருக்குத் தெரியும்?
There's A History Behind Elon Musk's New Twitter Logo 'X'
There's A History Behind Elon Musk's New Twitter Logo 'X'Twitter
Published on

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்களை கையாளும் நிறுவனங்களை நடத்தி வருகிறார் எலான் மஸ்க். உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கடந்த அக்டோபர் மாதம் வாங்கினார்.

அதன் பிறகு, நிறுவனத்தில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்த மஸ்க், லே ஆஃப், புளு டிக்கிற்கான கட்டணம் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ட்விட்டர் பயனர்கள் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்வீட்களை மட்டுமே பார்க்க முடியும். பணம் செலுத்தி ட்விட்டரில் ப்ளூ பேஜ் பெற்றிருக்கும் சந்தாதாரர்களுக்கும் இந்த வரைமுறை என பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார் எலான் மஸ்க்.

இந்நிலையில், ட்விட்டரின் லோகோவை மாற்ற இருப்பதாக அறிவித்துள்ளார் மஸ்க். சிறந்த லோகோ கிடைக்கும் பட்சத்தில் இன்று இரவே ட்விட்டரின் லோகோ மாற்றப்பட்டுவிடும் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ட்விட்டரின் அடையாளமான நீலக் குருவி லோகோவுக்குப் பதிலாக டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் நாய் படத்தை லோகோவாக வைத்தார். பின்னர் நீலக் குருவியை லோகாவே வைத்தார். இந்நிலையில் ட்விட்டர் லோகோவை "எக்ஸ்" என மறுபெயரிடுவதாக அறிவித்திருக்கிறார்.

ஆனால் ட்விட்டரின் புதிய லோகோ 1999 இலேயே, பயன்படுத்த நினைத்தது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

பிரபல எழுத்தாளர் வால்டர் ஐசக்சனின் கூற்றுப்படி, X.com என்ற பெயருடன் எலான் மஸ்க்கின் மோகம் 20 வருஷத்திற்கு பின்னோக்கி செல்கிறது.

மஸ்க், அவரின் நிறுவனத்துக்கு X.com என்று பெயரிட விரும்பினார். துணை நிறுவனங்களில் ஒன்றான PayPal என்ற மின் வணிக நிறுவனத்திற்கு X-PayPal என்று மறுபெயரிட முயன்றார் மஸ்க். ஆனால் PayPal ஏற்கனவே நம்பகமான பிராண்டாக இருந்ததால் எதிர்ப்பு இருந்தது.

X.com என்ற பெயரில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் 2000 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பேபாலில் இருந்து மஸ்க் வெளியேற வழிவகுத்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான ஊழியர்கள் PayPal என்ற பெயரை விரும்பினர். மேலும் 2001 ஆம் ஆண்டில் நிறுவனம் மறுபெயரிடப்பட்டது.

There's A History Behind Elon Musk's New Twitter Logo 'X'
ட்விட்டரில் அடுத்தடுத்து மாற்றம்; எலான் மஸ்க்கு சவால் விடும் 3 APPகள் - என்னென்ன?

PayPal அமெரிக்காவிலிருந்து இயங்கும் உலகளாவிய மின் வணிக நிறுவனமாகும். இது ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தவும் பண பரிமாற்றம் நடைபெறவும் வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பேர் மீதான மோகம் எலான் மஸ்க்கு இன்னும் ஓடியடையவில்லை, ட்விட்டரின் லோகோவாக மாற்ற எலான் மஸ்க் முற்படுகிறார். இதற்கு பலரும் கமெண்டில் விமர்சித்து வருகின்றனர்.

ட்விட்டரின் லோகாவை மாற்ற இருப்பதாகவும் ட்விட்டரின் பிராண்டை சீரமைப்பு செய்ய இருப்பதாகவும் தற்போது எலான் மஸ்க் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு கவனம் ஈர்த்துள்ளது.

There's A History Behind Elon Musk's New Twitter Logo 'X'
Threads : ட்விட்டர் போலவே புதிய செயலியை தொடங்கிய மெட்டா - வழக்கு தொடர்கிறாரா எலான் மஸ்க்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com