பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியாக வங்கிகள் இருக்கும். அது அங்கு வாழும் பொதுமக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் சர்வதேச அளவில் சில நாடுகளில் வறுமை பேரிடர் போன்றவை ஏற்படும் போது அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த உதவும் வகையில் வங்கி அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் உள்ள உலக வங்கி, வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கி வருகிறது.
இந்த உலக வங்கியின் நோக்கமே வறுமையில்லா உலகை உருவாக்குவது ஆகும். மொத்த 195 நாடுகளில், உலக வங்கி குழுவில் உள்ள அனைத்து நாடுகளும் உறுப்பினர்களாக இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா ? தற்போது உலக வங்கியில் 189 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
உலக வங்கியில் உறுப்பினர்களாக இல்லாத நாடுகள் பற்றி தான் தற்போது பார்க்கப்போகிறோம்
எப்போதும் திகில் தேசமாக அறியப்படும் வடகொரியா பல ஆண்டுகளாக தனது எல்லைகளை மூடியே வைத்துள்ளது. இங்கு கம்யூனிச கொள்கை என்ற பெயரில் கடும் கட்டுப்பட்டையும் கொள்கையினையும் வைத்துள்ளது நாடு.
அதன்படி எந்த வெளியுலக உதவியும் இல்லாமல் இருக்கிறது இந்த நாடு. இதனாலே உலக வங்கியில் உறுப்பினர் ஆகாமல் உள்ளது.
18 சதுர மைல் பரப்பளவில் மற்றும் சுமார் 77,000 மக்கள்தொகை கொண்ட இந்த மைக்ரோஸ்டேட் உலக வங்கியில் உறுப்பினராக இல்லை.
இதற்கு முக்கிய காரணம், அன்டோரா பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டுள்ளது. அவை இரண்டும் உலக வங்கியின் உறுப்பினர்களாக உள்ளன.
ஸ்பெயினையும் பிரான்ஸையும் பாதிக்கும் எந்தவொரு கொள்கையும் அன்டோராவை பாதிக்கும். எனவே உலக வங்கியில் உறுப்பினர் ஆகாமல் உள்ளது.
வட கொரியாவைப் போலவே, கியூபாவும் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் அண்டை நாடுகளுடனும் பிற சர்வதேச அமைப்புகளுடனும் பெரும்பாலான வெளிநாட்டு உறவுகளிலிருந்து நாடு தனிமைப்படுத்தப்பட்டது. கம்யூனிச கொள்கையால் உலக வங்கியில் இடம் பெறாமல் உள்ளது
மொனாக்கோ, அன்டோராவைப் போலவே, ஒரு மைக்ரோஸ்டேட் ஆகும். இது பிரான்சின் ஒரு பகுதியாக உள்ளது. இது ஒரு சுதந்திர இறையாண்மை நாடாக மாறுவதற்கான முயற்சியில் நீண்டகாலமாக போராட்டங்களை எதிர்கொண்டது. இது 1993 இல் வெற்றியடைந்தாலும், மொனாக்கோவின் பொருளாதாரம் பிரெஞ்சு பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் உலக வங்கியின் நேரடி உறுப்பினர்களாக இல்லாததற்கு இதுவே காரணமாக கூறப்படுகின்றது.
லிச்சென்ஸ்டீன் ஒரு சுதந்திரமான மைக்ரோஸ்டேட். இது சுமார் 36,000 மக்களைக் கொண்ட சிறிய நாடாகும். உலக வங்கிக்கு பதிலாக சுவிட்சர்லாந்துடன் நாணய சங்கம் வைத்துள்ளது. இது அவர்களின் பொருளாதார கடனுக்கு உதவுவதால் வேறு எந்த சர்வதேச நிறுவனத்துடனும் ஈடுபடாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
உலக வங்கியில் உறுப்பினராக இல்லாத நாடுகளில் தைவானும் உள்ளது. உலக வங்கியின் இணையதளத்தின்படி தனி நாடாக தைவான் பட்டியலிடப்படவில்லை. சீனாவின் தலையீடு காரணமாகவும் அங்கீகாரம் பெறவில்லை என கூறப்படுகிறது, ஆனால் உலக மொத்த வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில் தைவான் உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust