500 பேர் மட்டுமே வைத்திருக்கும் உலகின் அரிதான பாஸ்போர்ட் எது தெரியுமா?

உலகின் மிகவும் அரிதான பாஸ்போர்ட் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தற்போது, உலகளவில் சுமார் 500 பாஸ்போர்ட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இந்த பாஸ்போர்ட்டுகள் 44 பக்கங்களுடன் வருகின்றன.
This is the world’s rarest passport, held by only 500 people!
This is the world’s rarest passport, held by only 500 people!Twitter
Published on

நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பயணங்கள் மேற்கொள்வோருக்கு, பாஸ்போர்ட் அவசியமான ஒன்று.

வெளிநாட்டுப் பயணத்தில் பாஸ்போர்ட்டின் பங்கு மிக முக்கியமானது. பாஸ்போர்ட் இல்லாமல், நீங்கள் எந்த ஒரு நாட்டின் எல்லைக்குள்ளும் அடியெடுத்து வைத்துவிட முடியாது.

பாஸ்போர்ட் கையிலிருந்தால்தான் நீங்கள் ஒரு நாட்டிற்குள் சுதந்திரமாகச் சுற்றி வர முடியும். அதே சமயம் பாஸ்போர்ட் வழங்குவதன் அடிப்படை நோக்கமே, ஒரு நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர், எங்கிருந்து வருகிறார், எங்குச் சென்றார், எங்குச் செல்கிறார் போன்ற விஷயங்களைக் காட்டுவதற்காகத்தான். அப்படி முக்கியமானதாக இருக்கும் பாஸ்போர்ட் மதிப்பு ஒவ்வொரு நாட்டிற்கெற்ப மாறுபடுகிறது.

உலகளவில் மதிப்புமிக்க பாஸ்போர்ட்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 80ம் இடத்தில் உள்ளது. தொடர்ந்து 5ஆம் ஆண்டாக ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளின் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது.

ஜப்பானிய பாஸ்போர்ட் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களில் ஒன்றாக இருப்பதால் அதனை வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் உலகின் மிகவும் அரிதான பாஸ்போர்ட் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகின் மிக அரிதான கடவுச்சீட்டு மால்டாவின் இறையாண்மை இராணுவ ஆணை ஆகும். இது தனிப்பட்ட கார் உரிமத் தகடுகள், நாணயம், பாஸ்போர்ட் மற்றும் முத்திரைகளை வெளியிடுகிறது. ஆர்டர் ஆஃப் மால்டா 1300 களில் முதல் பாஸ்போர்ட்களை வழங்கியது.

ஆர்டர் ஆஃப் மால்டா வெளிநாட்டு பணிகளில் ஈடுபடும் தூதர்களுக்கு பாஸ்போர்ட்களை முன்கூட்டியே வழங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பல்வேறு நாடுகளின் பாஸ்போர்ட்டுகளின் அம்சங்களை உள்ளடக்கி இந்த பாஸ்போர்ட்டுகளை உருவாகியது.

தற்போது, உலகளவில் சுமார் 500 இராஜதந்திர பாஸ்போர்ட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இந்த பாஸ்போர்ட்டுகள் 44 பக்கங்களுடன் வருகின்றன.

அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் இந்த பாஸ்போர்ட்டை பயணத்திற்கான சரியான ஐடியாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், இது 120 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

This is the world’s rarest passport, held by only 500 people!
இந்தியாவில் தத்கல் பாஸ்போர்ட் என்றால் என்ன? இதனை நாம் எப்படி பெறலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com