பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்கு அமெரிக்கா சதி செய்கிறது என இம்ரான் கான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். அமெரிக்கா இதை மறுத்தது. ஆனால் சீனா மற்றும் ரஷ்யா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தான் ஆதரவு வழங்கவில்லை என்ற காரணத்தால் அமெரிக்கா தன்னை பதவியிலிருந்து நீக்க சதி செய்தது என்றார் இம்ரான் கான்.
அதுமட்டும் அல்லாமல் எதிர்க்கட்சிகளும் வெளிநாட்டின் சதியில் இணைந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். செம்மறி ஆடுகளை போல ஆட்சியை கவிழ்ப்பதற்கு அவர்கள் பேரம் பேசி வருவதாக தெரிவித்தார். ஆனால் தனது எந்த கூற்றுக்கும் இம்ரான் கான் ஆதரங்களை அளிக்கவில்லை.
இம்ரான் கான் மட்டுமல்ல அவரின் பிடிஐ கட்சியை சேர்ந்த அனைவரும் இம்ரான் கான் சர்வதேச சதிக்கு பலியாகிவிட்டார் என்றே கூறினர்.
சரி விஷயத்திற்கு வருவோம். இம்ரான் கான் வீட்டில் தரை இறங்கிய ஹெலிகாப்டர் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
அதாவது நள்ளிரவு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு முன்பு சில தடவை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
அந்த சமயத்தில் பல பரபரப்பாக சம்பவங்கள் அங்கே அரங்கேறி உள்ளன.
சனிக்கிழமையன்று, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்ட சமயத்தில், ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்கட்சி உறுப்பினர்களும் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த நேரத்துக் இம்ரான் கான், தமது அதிகாரபூர்வ இல்லத்தில் அரசியல் ஆலோசகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
இதனை அடுத்து தமது அமைச்சரவையின் கடைசி கூட்டத்துக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்தார்.
இந்த சமயத்தில் தேசிய அவையின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பிரதமரின் இல்லத்துக்கு வந்தடைந்தனர். ஆனால் பிரதமர் அலுவலகத்திற்கு அடுத்துள்ள ஓய்வறையில் காத்திருக்குமாறு அவர்கள் இருவரும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இதற்கிடையில், பிரதமரின் இல்லத்தில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் தளத்தில் தனி ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அதில் இரண்டு விருந்தினர்கள் அசாதாரண பாதுகாப்பு மற்றும் ஆயுதம் ஏந்திய படையினர் சூழ இம்ரான் கானின் வீட்டுக்குள் சென்றனர்.
அந்த இரு விருந்தினர்களும் சுமார் 45 நிமிடங்கள் இம்ரான் கானிடம் பேசினர். இந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை.
எவ்வாறாயினும், இந்த சந்திப்பு குறித்து பின்னர் நம்பகமான அரசாங்க வட்டாரங்கள் கூறும்போது, இம்ரான் கானுக்கும் இரு விருந்தினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இனிமையானதாக இருக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.