இங்கிலாந்தின் கென்ட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 10 வருடங்களாக பாஸ்தாவை மட்டும் சாப்பிட்டு வருகிறார். அதற்கு அவர் கூறும் காரணம் தான் இணையவாசிகளை குழப்பமடைய செய்துள்ளது.
சியாரா ஃபிராங்கோ என்ற 13 வயது சிறுமி கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக பாஸ்தா மற்றும் குரோய்சண்ட் சாப்பிட்டு வருகிறார்.
ஃபிராங்கோவின் இந்த விசித்திரமான உணவுப் பழக்க முறை சிறு வயதிலிருந்தே தொடங்கியிருக்கிறது. ஃபிராங்கோ குழந்தையாக இருக்கும் போது ஒருமுறை உணவு நாசியில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
அதிலிருந்து வேறு எந்த உணவையும் சாப்பிட பயந்து வருகிறார். மதிய உணவிற்கு குரோய்சண்ட்ஸ் மற்றும் இரவு உணவிற்கு பாஸ்தாவை அவர் சாப்பிட்டு வருகிறார்.
இது குறித்து பிராங்கோவின் தாய் ஏஞ்சலா கூறுகையில்,
”அவள் இரண்டு வயதிலிருந்தே, மதிய உணவாக குரோய்சண்ட்ஸ் மற்றும் ப்ளைன் பாஸ்தாவை மட்டுமே சாப்பிட்டு வருகிறாள். எப்போதாவது சோளம், சாதாரண தானியங்களை சாப்பிட முயற்சி செய்வாள்.”
மகளின் பிடிவாதமான மனநிலையை மாற்ற மொத்த குடும்பமும் முயற்சிப்பதாக அவர் கூறினார். மேலும், “இதிலிருந்து மகளை மீட்க முயற்சி செய்து வருகிறோம்.” எனவும் ஏஞ்சலா கூறினார்
ஹிப்னோதெரபிஸ்ட்டுடனான இரண்டு அமர்வுகள் பிராங்கோவின் உணவுப் பழக்கத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தன.
ஃபிராங்கோ ஹிப்னோதெரபிக்குப் பிறகு பல புதிய உணவுகளை முயற்சித்திருக்கிறார். சைனீஸ் உணவு வகைகள் மற்றும் அன்னாசிப்பழம் போன்ற பலவிதமான புதிய உணவுகளை சாப்பிட தொடங்கியிருப்பதாக தாய் கூறினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust