சீனா: அந்தரத்தில் தொங்கும் பெட்டிக்கடை - திக் திக் ஷாப்பிங் செய்ய ரெடியா?

இந்த பெட்டிக்கடை தரையில் இருந்து 120 மீட்டர், (393 அடி) உயரத்தில் உள்ளது. மலை ஏறுபவர்களுக்கு வழங்க உணவுப் பொருட்களை தேசிய பூங்கா ஊழியர்கள் ஜிப்லைன்கள் மூலமாக இந்த கடையில் நிரப்புகிறார்கள்.
சீனா: அந்தரத்தில் தொங்கும் பெட்டிக்கடை - திக் திக் ஷாப்பிங் செய்ய ரெடியா?
சீனா: அந்தரத்தில் தொங்கும் பெட்டிக்கடை - திக் திக் ஷாப்பிங் செய்ய ரெடியா?ட்விட்டர்
Published on

சாதாரணமாக நமக்கு ஏதாவது சில்லறை பொருட்கள் வாங்கவேண்டும் என்றால் எங்கு போவோம்?

வீடுக்கு பக்கத்தில், தெருமுனையில், அல்லது எட்டும் தூரத்தில் இருக்கும் பெட்டிக் கடைகளுக்கு.

இங்கு சென்று வருவது ஒன்றும் அவ்வளவு பெரிய சாகசம் அல்ல, (தெரு நாய்களை கண்டு நீங்கள் பயப்படமாட்டீர்கள் என்றால்).

ஆனால் சீனாவில் உள்ள இந்த பெட்டிக்கடைக்கு செல்வதில் ஏகபோக சிக்கல் இருக்கிறது. ஒரு கடைக்கு செல்வதில் என்ன சிக்கல் எனக் கேட்டால், அந்த கடை அமைந்திருக்கும் இடம் அப்படி!

சீனாவின் பிங்ஜியாங் கவுண்டி, ஹுனான் மாகாணத்தில் இருக்கும் ஷினியுசாய் தேசிய புவியியல் பூங்காவில் ஒரு கட்டடம் இருக்கிறது. கடந்த 2018ல் திறக்கப்பட்ட இந்த கட்டடம் ஒரு சிறிய, மரத்தினால் ஆன பெட்டிக்கடை ஆகும்.

இந்த பெட்டிக்கடை ஒரு மலையில் இருக்கிறது. மலைகளின் மேல் கடைகள் இருப்பதில் என்ன அதிசயம் என்று கேட்டால், இந்த கடை அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது.

அதாவது, இந்த பூங்காவில் பெரிய மலைப்போல இருக்கும் பாறை மேல் ஏறுபவர்களுக்கு refreshments, ஸ்நாக்ஸ் போன்றவை வழங்க இந்த கடை அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டிக்கடை தரையில் இருந்து 120 மீட்டர், (393 அடி) உயரத்தில் உள்ளது. பாறை ஏறுபவர்களுக்கு வழங்க உணவுப் பொருட்களை தேசிய பூங்கா ஊழியர்கள் ஜிப்லைன்கள் மூலமாக இந்த கடையில் நிரப்புகிறார்கள்.

இங்கு சென்று ஷாப்பிங் செய்வது மக்களுக்கு ஒரு த்ரில்லான அனுபவத்தை வழங்குகிறது.

இந்த பெட்டிக்கடையின் புகைப்படங்களை Science Girl என்ற ட்விட்டர் பக்கதில் பயனர் வெளியிட்டிருக்கிறார். புகைப்படங்கள் இணையத்தில் பரவி பலரின் கவனத்தை பெற்று வருகிறது

சீனா: அந்தரத்தில் தொங்கும் பெட்டிக்கடை - திக் திக் ஷாப்பிங் செய்ய ரெடியா?
China : முத்துமிடும் கருவி - எப்படி வேலை செய்கிறது, விலை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com