நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பயணங்கள் மேற்கொள்வோருக்கு, பாஸ்போர்ட் அவசியமான ஒன்று.
வெளிநாட்டுப் பயணத்தில் பாஸ்போர்ட்டின் பங்கு மிக முக்கியமானது. பாஸ்போர்ட் இல்லாமல், நீங்கள் எந்த ஒரு நாட்டின் எல்லைக்குள்ளும் அடியெடுத்து வைத்துவிட முடியாது.
பாஸ்போர்ட் கையிலிருந்தால்தான் நீங்கள் ஒரு நாட்டிற்குள் சுதந்திரமாகச் சுற்றி வர முடியும். அதே சமயம் பாஸ்போர்ட் வழங்குவதன் அடிப்படை நோக்கமே, ஒரு நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர், எங்கிருந்து வருகிறார், எங்குச் சென்றார், எங்குச் செல்கிறார் போன்ற விஷயங்களைக் காட்டுவதற்காகத்தான்.
இவ்வளவு விஷயங்கள் இருப்பதால்தான், பாஸ்போர்ட் இல்லாமல் ஒரு நாட்டுக்குள் ஒருவர் வந்தால், அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.
இந்த அளவுக்கு முக்கியமானதாக இருக்கும் பாஸ்போர்ட் இந்த மூன்று பேருக்கு மட்டும் தேவையில்லை என்ற சிறப்பு சலுகை உள்ளது. அவர்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்.
ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ இந்த சலுகை இல்லை அப்போ யாருக்கு?
பிரிட்டன் மன்னர், ஜப்பான் ராஜா மற்றும் ராணி ஆகிய மூவருக்கும் தான் இந்த சலுகை உள்ளது. பிரிட்டன் மன்னராக சார்லஸ் ஆவதற்கு முன்பு மறைந்த ராணி எலிசபெத்திடம் இந்த சலுகை இருந்தது.
சார்லஸ் பிரிட்டன் மன்னராக பதவியேற்றவுடன், அவரது செயலர் தனது நாட்டின் வெளியுறவு அமைச்சகம் மூலம் அனைத்து நாடுகளுக்கும் ஒரு ஆவணச் செய்தியை அனுப்பினார்.
இப்போது பிரிட்டனின் அரச குடும்ப தலைமை பொறுப்பில் மன்னர் சார்லஸ் இருக்கிறார். எனவே அவரை முழு மரியாதையுடன் எங்கும் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் செய்தி அனுப்பப்பட்டது.
அடுத்து ஜப்பான் பேரரசர் மற்றும் பேரரசிக்கு இந்த சலுகை உள்ளது. தற்போது ஜப்பானின் பேரரசராக இருப்பவர் நருஹிட்டோ.
அவரது மனைவி மசாகோ ஓவாடா ஜப்பானின் பேரரசி. தந்தை அகிஹிட்டோ பேரரசராக பதவி துறந்த பிறகு அவர் இந்த பதவியை ஏற்றுக்கொண்டார். அவரது தந்தை ஜப்பான் பேரரசராக இருக்கும் வரை, அவரும் அவரது மனைவியும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை இருந்தது. எனவே இவர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை.
உலகின் அனைத்து நாட்டு பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும்போது அவர்கள் பாஸ்போர்ட்களை வைத்திருக்க வேண்டும்.
இந்த தலைவர்களுக்கு பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பிற நடைமுறைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இந்த அந்தஸ்து பிரதமர், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு உண்டு.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust