ஜனவரி 1 2023 அன்று சியோலில் இருந்து புறப்பட்ட விமானம், டிசம்பர் 31 2022 அன்று சான் ஃபிரான்சிஸ்கோவை சென்றடைந்துள்ளது!
ஆம், சரியாகத் தான் படித்தீர்கள்...2023இலிருந்து 2022க்கு டைம் டிராவல் செய்துள்ளனர், இந்த விமானத்தில் பயணித்த பயணிகள்
கடந்த ஜனவரி 1 2023 நள்ளிரவு 12.29 மணிக்கு தென் கொரியாவின் சியோலில் இருந்து யுனைட்டட் ஏர்லைன்ஸின் போயிங் 777 விமானம் சான் ஃபிரான்சிஸ்கோவுக்கு புறப்பட்டது. இதில் பயணித்தவர்கள், ஒரு நாள் பின்னுக்கு சென்றுள்ளனர்.
ஜனவரி 1ஆம் தேதி புறப்பட்ட இந்த விமானம் டிசம்பர் 31 2022 அன்று மாலை 5.01 மணிக்கு சான் பிரான்ச்இஸ்கோவுக்கு சென்றடைந்துள்ளது.
பசிபிக் பெருங்கடலை மையமாக வைத்து சர்வதேச நேரம் கணக்கிடப்படுவதால், ஆசியாவைவிட அமெரிக்காவில் 23 மணி நேரம் தாமதமாக நிகழ்கிறது. இதே பாதையில் பயணிக்கும் பட்சத்தில், இந்த இடைவெளி இன்னும் அதிகரிக்கிறது. பிரேசிலின் நேரத்தின்படி, அந்த விமானம் 2023ஆம் ஆண்டில் தான் இருந்தது.
9 மணி நேரம் 46 நிமிட நீளம் கொண்ட இந்த பயணம் கிரீன்விச் மெரிடியனிலிருந்து 180 டிகிரி கடந்திருக்கிறது. இந்த செய்தி flight trader 24 என்ற ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust