அம்பானி To பில் கேட்ஸ் : உலகில் விலை உயர்ந்த வீடுகளை வைத்திருப்போர் பட்டியல்

உலகின் மிக விலையுயர்ந்த வீடு லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ளது. உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடு இந்தியாவில் உள்ளது, அது இந்தியாவின் பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது.
Top 10 Most Expensive Homes in the World
Top 10 Most Expensive Homes in the WorldTwitter
Published on

ஒவ்வொருவரின் குறைந்தபட்ச கனவாக இருப்பது சொந்த வீடு. அதுவும் அவர்களுக்கு பிடித்த மாதிரியான டிசைனில் கட்டி கொள்கின்றனர். பணக்காரர்கள், திரைப்பிரபலங்களில் வீடுகள் கோடிக்கணக்கில் விலை போகும்.

ஆனால் உலகின் மிக விலையுயர்ந்த வீடு லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது அரச குடும்பத்துக்கு சொந்தமானது. இதன் மதிப்பு $1 பில்லியனுக்கும் அதிகமாம்.

உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடு இந்தியாவில் உள்ளது, அது இந்தியாவின் பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது.

மும்பையின் கும்பல்லா மலையில் உள்ள ஆண்டிலியா, 27 மாடி கொண்ட இது $1-2 பில்லியன் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

பக்கிங்ஹாம் அரண்மனை அரச சொத்து என்பதால் அம்பானியின் ஆண்டிலியா உண்மையில் உலகின் மிக விலையுயர்ந்த தனியார் குடியிருப்பு வீடு ஆகும்.

இப்படி உலகின் மிக விலையுயர்ந்த 10 வீடுகள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

1. பக்கிங்ஹாம் அரண்மனை, லண்டன்

பக்கிங்ஹாம் அரண்மனை தொழில்நுட்ப ரீதியாக ஒரு அரச சொத்து என்றாலும், இது உலகின் மிக விலையுயர்ந்த வீடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த வீடு 775 அறைகள், 188 பணியாளர் அறைகள், 52 அரச மற்றும் விருந்தினர் படுக்கையறைகள், 92 அலுவலகங்கள், 78 குளியலறைகள் மற்றும் 19 பெட் ரூம்களைக் கொண்டுள்ளது.

2. ஆன்டிலியா மும்பை, இந்தியா

இரண்டாவது தரவரிசை முகேஷ் அம்பானியின் 400,000 சதுர அடி ஆண்டிலியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மும்பையின் கும்பல்லா ஹில்ஸில் உள்ள விலையுயர்ந்த வில்லா தான் இந்த ஆண்டிலியா.

சிகாகோவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்களான பெர்கின்ஸ் மற்றும் வில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான லெய்டன் ஹோல்டிங்ஸ் ஆகியோர் இந்த வீட்டை வடிவமைத்துள்ளனர்.

இந்த வீட்டில் 27 தளங்கள் உள்ளன. ஒவ்வொரு தளமும் சராசரியாக இரண்டு மாடி கட்டிடத்தின் தளத்திற்கு சமமானதாகும்.

இந்த வில்லா ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டது. இந்த கட்டிடத்தில் அம்பானியின் 5 கோடி ரூபாய் மதிப்பிலான மெர்சிடிஸ் மேபேக் உட்பட கார்களுக்காக ஆறு பிரத்யேக மாடிகள் கட்டப்பட்டுள்ளது.

3. வில்லா லியோபோல்டா - கோட் டி அஸூர், பிரான்ஸ்

பிரேசிலியன் பரோபகாரி மற்றும் லெபனான் வங்கியாளர் வில்லியம் சஃப்ராவிற்கு சொந்தமானது இந்த வில்லா.

லில்லி சஃப்ரா தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு வில்லாவைப் பெற்றார். 50 ஏக்கர் தோட்டத்தில் ஒரு பெரிய கிரீன்ஹவுஸ், ஒரு நீச்சல் குளம், வெளிப்புற சமையலறை, ஒரு ஹெலிபேட் மற்றும் விருந்தினர் மாளிகை ஆகியவை இதில் அடங்கும்.

Top 10 Most Expensive Homes in the World
நவீன வசதி மாறாத பாரம்பரிய மண் வீடு : இளைஞரின் அசத்தல் ஐடியா - ஓர் அடடே சுற்றுலா தலம்!

4. வில்லா Les Cèdres - பிரெஞ்சு

பிரெஞ்சு ரிவியராவில் உள்ள Villa Les Cèdres விலை $410 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பை உடையது. அரண்மனை போன்ற வில்லா 1830 இல் பெல்ஜியம் மன்னருக்காக கட்டப்பட்டது.

18,000 சதுர அடி கொண்ட வீடு 14 படுக்கையறைகள், ஒரு ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம், 30 குதிரைகள் நிற்கும் அளவுக்கு பெரிய தொழுவம், பிரமாண்டமான உட்காரும் அறைகள், 3,000 புத்தகங்களை வைத்திருக்கும் மரத்தாலான நூலகம் போன்றவை இதில் அடங்கும்.

5. ஃபோர் ஃபேர்ஃபீல்ட் பாண்ட் - நியூயார்க்

நியூயார்க்கின் சகாபோனாக்கில் அமைந்துள்ள ஃபோர் ஃபேர்ஃபீல்ட் பாண்ட் ரென்கோ குழுமத்தின் உரிமையாளரான ஐரா ரென்னருக்கு சொந்தமானது.

அவர் கார் உற்பத்தி நிறுவனத்தை நடத்துகிறார். ஐந்தாவது இடத்தில் உள்ள இந்த வீட்டில் 63 ஏக்கர் பரப்பளவில் 29 படுக்கையறைகள், அதன் சொந்த மின் உற்பத்தி நிலையம், 39 குளியலறைகள், ஒரு கூடைப்பந்து மைதானம், டென்னிஸ் மைதானங்கள், மூன்று நீச்சல் குளங்கள் உள்ளன.

6. எலிசன் எஸ்டேட் - உட்சைட், கலிபோர்னியா

இந்த 23 ஏக்கர் சொத்து ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசனுக்கு சொந்தமானது. இந்த வளாகத்தில் 10 கட்டிடங்கள், ஒரு தேநீர் வீடு மற்றும் ஒரு குளியல் இல்லம் உள்ளது.

Top 10 Most Expensive Homes in the World
'உலகின் தனிமையான வீடு' இதுதான்! - ஏன் கட்டப்பட்டது? பின்னணியில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

7. பலாஸ்ஸோ டி அமோர் - பெவர்லி ஹில்ஸ், கலிபோர்னியா

7வது தரவரிசையில் உள்ள இந்த வீடு 12 படுக்கையறைகள், 23 குளியலறைகள், டென்னிஸ் மைதானங்கள், நீச்சல் குளங்கள், ஒரு தியேட்டர், நீர்வீழ்ச்சிகள் மற்றும் 27 கார்கள் தங்கக்கூடிய ஒரு கேரேஜ் உள்ளிட்டவற்றை அடக்கியது. 2017 ஆம் ஆண்டில் இதன் விலை சுமார் $129 மில்லியன் ஆகும்.

8. செவன் தி பினாக்கிள் - மொன்டானா

எட்டாவது இடத்தில் உள்ள வீடு எட்ரா மற்றும் டிம்பர் பிலிக்ஸ்செத் என்பவர்களுக்கு சொந்தமானது.

இங்கு பல நீச்சல் குளங்கள், ஒரு உடற்பயிற்சி கூடம், பாதாளத்தில் மது அருந்த தனி அறை மற்றும் அதன் சொந்த ஸ்கை லிப்ட் என பல அம்சங்களை கொண்டுள்ளது.

9. சனாடு 2.0 - மதீனா, வாஷிங்டன்

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி மெலிண்டாவின் வீடு, வாஷிங்டனில் உள்ள மதீனாவில் உள்ள Xanadu 2.0, உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இந்த வீடு 66,000 சதுர அடி மற்றும் $63 மில்லியன் மதிப்புடையதாகும்.

18-19 கென்சிங்டன் அரண்மனை - லண்டன்

பத்தாவது தரவரிசையில் லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனை 12 படுக்கையறைகள், துருக்கிய குளியலறை, ஒரு உட்புற நீச்சல் குளம் மற்றும் 20 கார்களுக்கான பார்க்கிங்குடன் உள்ளது.

Top 10 Most Expensive Homes in the World
ஒரே வீடு, இரு வேறு மாநிலங்களுக்கு சொந்தம்: எப்படி சாத்தியம்? ஆச்சரியமூட்டும் தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com