Mossad : உலகின் சிறந்த 'உளவுத்துறை' செய்த 5 சம்பவங்கள் - வியக்க வைக்கும் தகவல்!

கூர்மையான உளவாளிகள் முதல் திறமையான ஜேம்ஸ் பான்ட்கள் வரை மொசாட் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் நம்மை ஆச்சரியப்படுத்த தவறுவதில்லை.
மொசாட் : உலகின் சிறந்த உளவுத்துறை செய்த 5 சம்பவங்கள் - வியக்க வைக்கும் தகவல்!
மொசாட் : உலகின் சிறந்த உளவுத்துறை செய்த 5 சம்பவங்கள் - வியக்க வைக்கும் தகவல்!Twitter

ரா ஏஜெண்டுகள், வெளிநாட்டு உளவாளிகள் குறித்து நாம் படங்களில் பார்த்து தெரிந்துகொள்கிறோம். உண்மையில் அப்படிப்பட்ட பணிகளில் இருப்பவர்கள் மிகப் பெரிய சாகசங்களை செய்கிறார்களா?

வெளிநாடுகளுக்கு சென்று யாருக்கும் தெரியாமல் தங்களது நடவடிக்கைகளை முடித்துவிட்டு திரும்புவதற்காக திறமையும் புத்திக்கூர்மையும் வாய்ந்த அதிகாரிகள் இருக்கின்றனர்.

உலகிலேயே சிறந்த உளவு அமைப்பாக கருதப்படுவது இஸ்ரேலின் மொசாட் தான். பல எதிரி நாடுகளில் சைலண்டாக காரியங்களை சாதித்திருக்கின்றனர். மொசாட் செய்த 5 சம்பவங்களைத் தான் இந்த பதிவில் விளக்கமாகப் பார்க்கப்போகிறோம்.

ஆப்பரேஷன் ஃபினாலே

ஹிட்லரின் ஹோலோகாஸ்ட் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். 1933 முதல்1945 வரை நடைபெற்ற இனப்படுகொலையில் நாஜி ஜெர்மனி மற்றும் அதன் நட்பு நாடுகளில் கோடிக்கணக்கான யூதர்கள் கும்பல் கும்பலாக படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலைகளுக்கான கெஸ்டாபோ என்ற ஹிட்லரின் ரகசிய காவல்படையில் நீண்டகாலம் தலைவராக இருந்தவர் அடால்ஃப் ஐக்மன் (Adolf Eichmann). யூதர்களை அழிக்க இறுதித் தீர்வு என்ற கொடூரமான திட்டம் இவரது காலத்தில் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் தங்கள் வீடுகளில் இருந்து முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர்.

இராண்டாம் உலகப் போருக்கு பிறகும் உயிருடன் இருந்த ஐக்மன் மூன்றுமுறை பிடிக்கப்பட்டார். ஆனால் கைது செய்யப்படவில்லை.

Adolf Eichmann
Adolf Eichmann

1957ம் ஆண்டு ஃபிரிட்ஸ் பாயர் என்ற யூதர் மொசாடுக்கு, அடால்ஃப் ஐக்மன் அர்ஜெண்டினாவில் வசிப்பதாக தகவல்கொடுத்துள்ளார். ஐக்மனின் மகன் ஒரு யூத பெண்ணுடன் காதலில் இருந்துள்ளார்.

அந்த பெண்ணின் வழியாக ஃபிரிட்ஸ் பாயருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை ஆராய்ந்து பார்த்து மொசாட் உறுதிப்படுத்தியது. அடால்ஃப் ஐக்மன் ஹிட்லரின் முக்கிய குழுவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அவரது படையிலும் உயரிய பதவி வகித்ததாக தி கேப்ச்சர் அண்ட் ட்ரையல் ஆஃப் அடால்ஃப் ஐக்மன் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.

மொசாடின் தலைவர் ஐக்மனை உயிருடன் பிடித்து இஸ்ரேலுக்கு அழைத்துவரும் மிஷனை தொடங்கினார். இதற்கு தளபதியாக ரஃபி ஐடன் (Rafi Eitan) என்ற அதிகாரியை நியமித்துள்ளார்.

இவர் தலைமையிலான மொசாட் குழு அர்ஜெண்டினாவுக்கு சென்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தனர். அந்த இடத்தை "கோட்டை (Castle)" எனக் குறிப்பிட்டு அழைத்தனர்.

1960ம் ஆண்டு அர்ஜெண்டினாவின் 150வது சுதந்திர தினம் மே 20 அன்று நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக இஸ்ரேலின் கல்வி அமைச்சர் அப்பா எபென் தலைமையில் ஒரு குழு அர்ஜெண்ட்டினா சென்றது. இவர்களை அழைத்துச் செல்ல இஸ்ரேல் ஏர்லைன்ஸ் விஸ்பரிங் ஜெயண்ட் என்ற விமானத்தை தயார் செய்தது.

அமைச்சருக்கு தெரியாமல் ஐக்மனைக் கடத்தி இந்த விமானத்தில் கொண்டுவருவது திட்டம். ஐக்மனின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. அவர் தினமும் மாலை 7:40 மணிக்கு பேருந்தில் வீடு திரும்புவதையும் வீட்டை அடைய சிறிது தூரம் நடப்பதையும் கண்டறிந்தனர்.

மிக சாதாரணமாக பேருந்தில் இறங்கி சென்ற ஐக்மனை குறிவைத்து இரண்டு கார்கள் வந்தன. பேருந்தில் இருந்து இறங்கிய உடனேயே ஐக்மன் பிடிபட்டார். அவரை ஒரு காரில் கடத்தி சென்றனர்.

மே 20ம் தேதி ஒரு இஸ்ரேலிய ஏர்லைன்ஸ் பணியாள் போல உடையணிந்து உடை அணிவிக்கப்பட்டு விஸ்பரிங் ஜெயண்டில் இஸ்ரேல் அழைத்துவரப்பட்டார். இரண்டு நாட்களுக்கு பிறகே உலகுக்கு இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

பல மாதங்களாக ஐக்மன் விசாரிக்கப்பட்டார். இறுதியில் 15 வழக்குகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். யூதர்களை கொன்று குவித்த நாஜி அதிகாரிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

பழிவாங்கள்

1972ம் ஆண்டு ஜெர்மனியில் மியூனிக் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. எல்லா நாட்டு வீரர்களும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்தனர். தங்களது அடுக்குமாடி குடியிருப்பில் இஸ்ரேலிய வீரர்கள் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தனர்.

திடீரென இயந்திர துப்பாக்கி சத்தம் எதிரொலித்தது. 11 இஸ்ரேலிய வீரர்கள் அந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர். ஒரு ஜெர்மனிய காவலாளியும் கொல்லப்பட்டார்.

விளையாட்டு வீர்ரகள் போல உடையணிந்துவந்த பாலஸ்தீனிய கருப்பு செப்டம்பர் அமைப்பினர், குடியிறுப்பில் நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் இஸ்ரேல், சிரியா மற்றும் லெபனானில் இருந்த 10 பாலஸ்தீனிய விடுதலைப் படை (PLO) தளங்களை குண்டுவீசி அழித்தது.

பால்கனியில் இருந்த கருப்பு செப்டம்பர் அமைப்பின் உறுப்பினர்
பால்கனியில் இருந்த கருப்பு செப்டம்பர் அமைப்பின் உறுப்பினர்

தொடர்ந்து மொசாட்டின் அப்போதைய தலைவரான ஸ்வி ஜமீர் எதிர் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். நடந்த சம்பவத்துக்கு நீண்டகாலமாக மொசாட் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

1972ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பாலஸ்தீனிய விடுதலைப்படை இத்தாலியின் பிரதிநிதியாக ரோமில் இருந்த அப்தெல்-வேல் ஜவைதாரை மொசாட் ஏஜெண்ட்கள் கொலை செய்தனர். இது பழிவாங்கல் நடவடிக்கையின் தொடக்கம் தான்.

மொசாட் அமைப்பு இஸ்ரேல் இராணுவத்துடன் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டது. 1973ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி இரவு இஸ்ரேலிய கமாண்டோக்கள் ஏவுகணைப் படகுகளில் ஒரு ஆளில்லாத லெபனான் கடற்கரையில் இறங்கினர்.

உயிரிழந்த வீரர்கள்
உயிரிழந்த வீரர்கள்

அடுத்தநாள் கருப்பு செப்டம்பர் அமைப்பின் உளவுப் பிரிவான ஃபத்தாவின் தலைவர் முகமது யூசுஃப் அல்லது அபு யூசுஃப், கமல் அத்வான் மற்றும் பாகிஸ்தான் விடுதலை அமைப்பின் செய்தி தொடர்பாளர் கமல் நாசர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த பழிவாங்கல் நடவடிக்கை அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்ததாக சிலர் கூறுகின்றனர்.

இந்த பழிவாங்கல் நடவடிக்கை குறித்து சைமன் ரீவ் எழுதிய 'ஒன் டே இன் செப்டம்பர்' புத்தகத்திலும் பல ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேலின் நாடாளுமன்ற குழு வெளியிட்ட அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிபிசி தளம் கூறுகிறது.

மொசாட் : உலகின் சிறந்த உளவுத்துறை செய்த 5 சம்பவங்கள் - வியக்க வைக்கும் தகவல்!
Josephine Baker: இசை உலகின் மகாராணி உளவாளி ஆன கதை - மினி சீரிஸ் 1

எலி கோஹன் - தேசபக்திமிக்க உளவாளி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனும் ரஷ்யாவும் முறுக்கிக்கொண்டு நின்றதைப் போல இஸ்ரேலும் சிரியாவும் 1960களில் உரசிக்கொண்டன. சிரிய இராணுவத்தால் வடக்கு இஸ்ரேலில் வசித்த மக்கள் அச்சுறுத்தப்படுவது தொடர்கதையாக இருந்தது.

இஸ்ரேலுக்கு சிரியா மிகப் பெரிய தலைவலியாக உருவானது. சிரியாவை சமாளிக்க ஒரு உளவாளியை அனுப்ப இஸ்ரேல் முடிவு செய்தது.

எலி கோஹன் இஸ்ரேலின் மொசாட்டில் வேலைக்கு சேர இரண்டு முறை முயன்று நிராகரிக்கப்பட்டவர். ஆனால் 1960ம் ஆண்டு அவரை மொசாட் தங்களது உளவாளியாக தேர்ந்தெடுத்தது.

எலி கோஹன் எகிப்தில் சிரியா வம்சாவளியைச் சேர்ந்த யூதர்களின் மகனாகப் பிறந்தவர் என்பது முக்கிய காரணம். தனது ஆப்பரேஷனை சரியாக செய்வதற்காக சிரிய பெற்றோருக்கு பிறந்த ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக தனக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு அர்ஜெண்டினாவுக்கு சென்றார்.

அர்ஜெண்டினாவில் குடியேரியுள்ள சிரிய மக்களின் குழுக்கள் மற்றும் சிரிய அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சிரியாவின் அதிகார வர்கத்தில் இருந்த பலருடன் தன்னை நெருக்கமாக்கிக்கொண்டார்.

இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், மூத்த இராணுவ அதிகாரிகளுடன் நட்பாக இருந்ததுடன், சிரியாவின் அதிபராக இருந்த ஒருவருடனும் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டார்.

1962ம் ஆண்டு சிரியாவில் பாத் கட்சி ஆட்சியமைத்தது. இதன்பிறகு சிரியாவில் வசிக்கத் தொடங்கினார். அர்ஜெண்டினாவில் இருந்த தனது தொடர்புகளை பயன்படுத்திக்கொண்டவர், சிரியாவில் பல உயரதிகாரிகளின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார்.

எலி கோஹனை பாதுகாப்பு துணை செயலாளராக நியமிக்க பேச்சுகள் எழும் அளவு அதிகாரிகள் அவர்மீது நம்பிக்கைக் கொண்டிருந்தனர். உயரதிகாரிகளுக்கு விலையுயர்ந்த பரிசுகளையும் மதுபானங்களையும் அளித்து அவர்களிடம் இருந்து தகவல்களை பெற்றார். திறமையான உளவாளியாக பெற்ற தகவல்களை மொசாட்டுக்கு அனுப்பினார்.

1964ல் சிரியா ஜோர்தான் நதியில் பெரிய கால்வாய் அமைத்து இஸ்ரேலின் நீர் விநியோகத்தை சிரியா துண்டிக்க திட்டமிடுவதாக எலி கோஹன் தகவல் அனுப்பினார். அதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட இஸ்ரேல், விமானப்படை மூலம் சிரியாவின் முகாம்களையும் கருவிகளை தாக்கி அழித்தது.

ஒருமுறை இஸ்ரேலின் எல்லையை ஆய்வு செய்யச் சென்ற எலி கோஹன், பல நாட்கள் உயர் இராணுவ அதிகாரிகளுக்கு அருகில் இருந்தார். இதன் விளைவாக மொசாட் சிரிய இராணுவத்தின் உண்மையான எண்ணிக்கை, பலம் மற்றும் எல்லைப்பாதுகாப்பு குறித்து அறிந்துகொண்டது.

மொசாட் : உலகின் சிறந்த உளவுத்துறை செய்த 5 சம்பவங்கள் - வியக்க வைக்கும் தகவல்!
சீனா: செயற்கை கோள்கள், ட்ரோன்கள் வளர்ந்த காலத்திலும் உளவு பார்க்க பலூன்களா? - காரணம் என்ன?

இந்த தகவல் கசிவு சிரிய இராணுவத்துக்கு மிக முக்கியமான பிரச்னையாக உருவெடுத்தது. சிரிய உளவுத்துறை கவலையடைந்து, நட்பு நாடாக இருந்த சோவியத் ரஷ்யாவின் உதவியை நாடியது.

1965ம் ஆண்டு இஸ்ரேலுக்கு தகவல் அனுப்பும் போது எலி கோஹனை சிரிய மற்றும் சோவியத் அதிகாரிகளின் அதிநவீன அதிக உணர்திறன் கொண்ட கருவிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.

கோஹனுக்கு சிரியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிரிய தலைநகர் டமாஸ்களின் மையத்தில் தூக்கிலிடப்பட்டார். இஸ்ரேலில் இன்றும் கோஹன் ஒரு தேசபக்தி மிக்க வீரராக நினைவுகூறப்படுகிறார்.

மொசாட் : உலகின் சிறந்த உளவுத்துறை செய்த 5 சம்பவங்கள் - வியக்க வைக்கும் தகவல்!
Suez History : அரபு உலகம் VS இஸ்ரேல் - சூயஸ் கால்வாய்க்காக நடந்த ஒரு பெரும் போர்

ஜேம்ஸ் பாண்ட்கள்

இஸ்ரேல் - ஈரான் நாடுகள் எப்போது எலியும் பூனையுமாகவே இருந்து வருகின்றன. இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்ற நிலை நிலவ பல காரணங்கள் இருந்தாலும் இரானின் அணு சக்தி திட்டத்தை முடக்க தீவிரமாகவே முயன்றது இஸ்ரேல்.

'Mossad: The Greatest Missions of the Israeli Secret Service' என்ற புத்தகம் 2012ம் ஆண்டு வெளியானது. அணு சக்தி திட்டத்தை முடக்க மொசாட் செய்த முயற்சிகளை இது விளக்கியுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் காட்சிகளைப் போல ஆபத்தான் பணிகளைக் கூட மொசாட் ரியலாக மேற்கொண்டதாக இது கூறுகிறது.

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்க இஸ்ரேல், அவர்களது ஆயுதங்களை பழுதாக்க எண்ணியது. இதனால் கிழக்கு ஐரோப்பாவில் சில நிறுவனங்களை நிறுவி பழுதான ஆயுதங்களை ஈரானுக்கு விற்றதாக அந்த புத்தகத்தின் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

2010ம் ஆண்டு அணு சக்தி திட்டத்தின் ஆலோசகரின் காருக்கு அருகில் இருந்த மோட்டார் பைக்கில் மறைத்து வைக்கப்பட்ட வெடிமருந்தை பயன்படுத்தி அவரைக் கொன்றதாக கூறப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு அணுசக்தி திட்டத்தின் தலைவர் காரில் சென்றுகொண்டிருக்கும் போது அவரை சாதாரண பைக் கடந்து சென்றுள்ளது. செல்லும் போது காரின் பின்புறக் கண்ணாடியில் ஒரு சிறிய சாதனத்தை மாட்டியுள்ளனர். சில வினாடிகளில் அந்த சாதனம் வெடித்து அவர் கொல்லப்பட்டுவிட்டார். அவரது மனைவி பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

மொசாட் : உலகின் சிறந்த உளவுத்துறை செய்த 5 சம்பவங்கள் - வியக்க வைக்கும் தகவல்!
"ஹிட்லர் ஒரு யூதர்" - ரஷ்யா கூறுவது உண்மையா? - விரிவான தகவல்கள்

தடையமே இல்லாத கொலை

பாலஸ்தீனிய அமைப்பான ஹமாஸ்-ன் தளபதிகளில் ஒருவர் முகமது அல்-ஸ்வாரி. இவரை துனிசியாவில் அவரது வீட்டுக்கு அருகில் ஓடும் காரில் இருந்து சிலர் துப்பாக்கியால் சுட்டனர்.

ஸ்வாரி ஒரு விமானவியல் பொறியாளர். ஹமாஸ் அமைப்புக்காகவும் ஹெஸ்புல்லாவுக்காகவும் பல ட்ரோன்களை வடிவமைத்துக்கொடுத்துள்ளார். 2016 டிசம்பரில் இவர் இறந்த பிறகும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

முகமது அல்-ஸ்வாரி நினைவேந்தல்
முகமது அல்-ஸ்வாரி நினைவேந்தல்

ஒரு சிம் கார்ட் மற்றும் யாரோ ஒருவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட வாடகைக் கார் மட்டுமே ஆதரங்களாக கிடைத்தன. இந்த கொலைக்கு மொசாட் தான் காரணம் என குற்றம் சாட்டியது ஹமாஸ்.

ஒரு அமைப்பைத் தாக்க அதன் தொழில்நுட்ப வல்லுநரைத் தாக்கும் மொசாட்டின் நடவடிக்கை வித்தியாசமானதாக பார்க்கப்படுகிறது. கண்மூடித்தனமான நேருக்கு நேர் மோதலாக இல்லாமல் பக்கபலமாக இருப்பவர்களைக் கூட மொசாட் குறிவைப்பது தெரியவந்தது.

மொசாட் : உலகின் சிறந்த உளவுத்துறை செய்த 5 சம்பவங்கள் - வியக்க வைக்கும் தகவல்!
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை : அ முதல் ஃ வரை - விரிவான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com