கோகினூர் முதல் நம்பிக்கை வைரம் வரை: உலகின் விலையுயர்ந்த வைரங்கள் - என்னென்ன சிறப்பு?

வைரங்கள் அவற்றின் தனித்தன்மை, காரட் எடை, நிறம், வெட்டு மற்றும் தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. கோஹினூர் வைரம்தான் உலகின் மிக விலையுயர்ந்த வைரம் என்று அறியப்பட்டாலும், 400 மில்லியன் டாலர்கள் வரை விலையுள்ள மற்ற சில வைரங்களை பார்ப்போம்.
கோகினூர் முதல் நம்பிக்கை வைரம் வரை:
கோகினூர் முதல் நம்பிக்கை வைரம் வரை:NewsSense
Published on

வைரங்கள் இல்லாமல் ஒரு பெண்ணின் அணிகலன்கள் இல்லை. ஒரு வைரமானது அதன் பளபளப்பிலிருந்து அதன் அளவு வரை, அதன் அழகிய தோற்றத்தால் கிட்டத்தட்ட அனைவரையும் கவர்ந்திழுக்கும் திறனைக் கொண்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு சிறந்த தோழி என்று வைரங்களுக்கு விளம்பரம் கொடுத்து சந்தைப்படுத்துகிறார்கள். கார்பன் அல்லது கரி ஒரு கவர்ச்சியான வைரமாக மாறுவதற்கு அபரிமிதமான அழுத்தம் மற்றும் வெப்பநிலை தேவைப்படுகிறது. இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நடக்கும் மாற்றமாகும்.

2007 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள சிர்கான் படிகங்களுக்குள் 4 பில்லியன் ஆண்டுகள் பழமையான வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்த வெட்டப்படாத பாறைத் துண்டுகள் எவ்வளவு தனித்துவமானது என்பதை காட்டுகிறது. மேலும் மூல வைரங்கள் உருவாகப் பல ஆண்டுகள் ஆகும் என்பதையும் காட்டுகிறது.

வைரங்கள் அவற்றின் தனித்தன்மை, காரட் எடை, நிறம், வெட்டு மற்றும் தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. கோஹினூர் வைரம்தான் உலகின் மிக விலையுயர்ந்த வைரம் என்று அறியப்பட்டாலும், 400 மில்லியன் டாலர்கள் வரை விலையுள்ள மற்ற சில வைரங்களை பார்ப்போம்.

கோஹினூர்- Kohinoor

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த வைரம் கோஹினூர். அறிக்கைகளின்படி, ஓவல் வடிவிலான இந்த வைரம் 109 காரட் கொண்டது. வைரத்தின் எடை 21.6 கிராம் ஆகும். மற்றும் பிரிட்டிஷ் கிரீடத்தின் முக்கிய வைரமாகும். வைரத்தின் தற்போதைய உரிமையாளராக பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் மகாராணி இருந்தாலும் அதன் பூர்வீகம் இந்தியா என்பது உலகறிந்த விஷயம். கோஹினூரின் தனிச்சிறப்பு காரணமாக இந்த வைரம் விலைமதிப்பற்றதாக கூறப்படுகிறது.

சான்சி வைரம் - The Sancy Diamond

கோஹினூருக்கு அடுத்தபடியாக சான்சி வைரம் விலை உயர்ந்த இரண்டாவது வைரமாகும். இதன் பூர்வீகமும் இந்தியாவில்தான் உள்ளது. தற்போது இந்த வைரம்​​கவசம் வடிவில் மாற்றியமைக்கப்பட்டதோடு அற்புதமான வெட்டுக்களையும் கொண்டது. இந்த வைரம் பிரான்சின் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்திற்குச் வ்சொந்தமானது. அறிக்கைகளின்படி, வைரம் 55.23 காரட் எடை கொண்டதோடு இதன் விலையும் மதிப்பற்றது.

கோகினூர் முதல் நம்பிக்கை வைரம் வரை:
மான்சா மூசா : பில்கேட்ஸ், அமேசான் ஜெஃப் பெசாஸைவிட உலகின் மிகப்பெரிய பணக்கார தங்க அரசன் கதை

கல்லினன் வைரம் - The Cullinan Diamond

பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது கல்லினன் வைரம். இதன் விலை 400 மில்லியன் டாலராகும். அறிக்கைகளின்படி, வைரத்தின் காரட் எடை 3,106.75 கிராம் ஆகும். மற்றும் உலகிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ரத்தின வகைப்பட்ட வைரங்களில் இதுதான் மிகப் பெரியது. 1905 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில் இந்த வைரம் கண்டெடுக்கப்பட்டது. சுரங்கத் தலைவரான தாமஸ் குல்லினனின் பெயரை இந்த வைரத்திற்கு வைத்தார்கள். வைரத்தின் தற்போதைய உரிமையாளர் பிரிட்டனின் ராணியான இரண்டாம் எலிசபெத் ஆவார். இது அவரது கிரீடத்தின் வலதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை வைரம் - The Hope Diamond

The Hope Diamond
The Hope DiamondTwitter

ஹோப் வைரம் இந்தியாவின் குண்டூரில் உள்ள கொல்லூர் சுரங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. இது உலகின் நான்காவது மிக விலையுயர்ந்த வைரமாகும். இதன் விலை 350 மில்லியன் டாலர் ஆகும். அறிக்கைகளின்படி, வைரமானது நீல நிறத்தில் உள்ளது. ஏனெனில் அதில் உள்ள போரான் எனும் ரசாயனத்தினால் இந்த வைரம் நீல வண்ணத்தை பெற்றுள்ளது. 45.52 காரட் கொண்ட இந்த வைரமானது தற்போது அமெரிக்க அருங்காட்சியக குழுவான ஸ்மித்சோனியன் நிறுவன அலுவலகத்திற்கு சொந்தமானது.

கோகினூர் முதல் நம்பிக்கை வைரம் வரை:
உலகின் காஸ்ட்லி வைரம் இதுதான் : அதன் சிறப்பு என்ன தெரியுமா?

டி பீர்ஸ் நூற்றாண்டு வைரம் - De Beers Centenary Diamond

De Beers Centenary Diamond
De Beers Centenary DiamondTwitter

அறிக்கைகளின்படி, டி பீர்ஸ் நூற்றாண்டு வைரமானது 273.85 காரட் வைரமாகும். மேலும் இது பிரீமியர் சுரங்கத்தில் தயாரிக்கப்பட்ட மூன்றாவது பெரிய வைரமாகவும் அறியப்படுகிறது. வைரமானது அதன் மாற்றியமைக்கப்பட்ட இதய வடிவத்திற்காக புகழ் பெற்றது. அதன் விலை 100 மில்லியன் டாலர் ஆகும்.

ஸ்டெய்ன்மெட்ஸ் பிங்க் வைரம் - The Steinmetz Pink Diamond

The Steinmetz Pink Diamond
The Steinmetz Pink DiamondTwitter

1999 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் வெட்டப்பட்ட ஸ்டெய்ன்மெட்ஸ் இளஞ்சிவப்பு வைரமானது, பிங்க் ஸ்டார் என மறுபெயரிடப்பட்டது. மற்றும் ஃபேன்ஸி விவிட் பிங்க் எனும் வகை வைரங்களில் இதுதான் மிகப்பெரிய வைரமாக அறியப்படுகிறது. 59.6 காரட் எடை கொண்ட இந்த வைரம் தற்போது காங்லோமரேட் நிறுவனமான சவ் தை ஃபூக்கிற்கு சொந்தமானது.

கோகினூர் முதல் நம்பிக்கை வைரம் வரை:
உலகின் மிக பெரிய வைரம் - அரியவகை Pink நிற வைரத்தின் மதிப்பு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com