சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ’மந்திர கல்’ - எங்கு இருக்கிறது தெரியுமா?

வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இது பற்றி கூறும் போது கல் இருக்கும் பழங்கால கோவில், ஹிட்டிட் பேரரசின் தலைநகரான ஹட்டுசாவின் பகுதி என கூறுகின்றனர். அதே சமயம் அப்போது ஆட்சியில் இருந்த ஹிட்டியர்கள் இனம் இந்த கல்லினை சிலைக்கான தளமாக வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Turkey: All about Hattusa’s green ‘wishing stone’ that is believed to have magical powers
Turkey: All about Hattusa’s green ‘wishing stone’ that is believed to have magical powersTwitter

மத்திய துருக்கியில் ஒரு பச்சை பாறை உள்ளது. இந்த பாறையில் மந்திர சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

துருக்கி என்றவுடன் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் தான் நினைவிற்கு வரும். இந்த இடங்கள், சுற்றுலாப் பயணிகளால் வெகுவாக கவரப்படுகிறது.

அதன் வரிசையில் மத்திய துருக்கியில் ஒரு பழங்கால கோவிலின் அருகில் மென்மையான பச்சை பாறை உள்ளது, உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி இது மனிதர்களின் கனவுகளை நிறைவேற்றி வைக்கும் கல் என்று நம்பப்படுகிறது. இந்த கல்லின் பெயர் ஹட்டுசா என அழைக்கின்றனர்.

இதுவரை இந்த கல்லின் உண்மையான வரலாறு குறித்து கண்டறியப்படவில்லை. ஆனால் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இது பற்றி கூறும் போது கல் இருக்கும் பழங்கால கோவில், ஹிட்டிட் பேரரசின் தலைநகரான ஹட்டுசாவின் பகுதி என கூறுகின்றனர். அதே சமயம் அப்போது ஆட்சியில் இருந்த ஹிட்டியர்கள் இனம் இந்த கல்லினை சிலைக்கான தளமாக வைத்திருக்காலாம் என்றும் ராஜா அமரும் சிம்மாசனமாகவோ அல்லது பலிபீடமாக அமைத்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஹிட்டியர்கள் அதிக ஆன்மிக நம்பிக்கையும் வானியல் அறிவும் உள்ளவர்களாக இருந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. அவர்கள் சூரியனின் திசை நேரத்தை அளவிட இந்த கல்லை பயன்படுத்தி இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

இந்த பச்சை நிற கல்லின் எடை சுமார் 2,200 பவுண்டுகள் என கூறப்படும் நிலையில் இந்த கல் அருகில் உள்ள டாரஸ் மலைகளில் இருந்து கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று சில நிபுணர்கள் ஊகிக்கின்றனர்.

ஹட்டுசா கல் குறித்த இந்த தகவல்கள் எல்லாம் யூகங்கள் மட்டுமே இந்த கல் எப்படி வந்தது என்பதற்கான வரலாற்று ரீதியிலான ஆதாரங்கள் இல்லை. ஆனால் ஆசைகளை நிறைவேற்றும் இந்த கல்லினை காண சுற்றுலாவாசிகள் குவிக்கின்றனர் .

Turkey: All about Hattusa’s green ‘wishing stone’ that is believed to have magical powers
துருக்கி: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ’முடி அருங்காட்சியகம்’ - எப்படி உருவானது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com