Twitter: பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சிஇஓ பராக்; கிடைக்க போகும் தொகை எவ்வளவு தெரியுமா?

இவருக்கு அப்போது வழங்கப்பட்ட அவரது பங்குகளின் தொகையை தான் நிறுவனம் அகர்வாலுக்கு அளிக்கவேண்டும்
parag-musk
parag-musktwitter
Published on

டிவிட்டர் நிறுவனத்தை சொந்தமாக்கிய கையோடு முன்னாள் தலைவர் பராக் அகர்வாலை வெளியேற்றினார் எலான் மஸ்க். உடன் முக்கிய நிர்வாகிகளான விஜயா கடே மற்றும் நெட் சேகல் ஆகியோரையும் அவர் வேலையிலிருந்து நீக்கினார்.

ஒரு கதவு மூடப்பட்டால் இன்னொன்று திறக்கும் என்பது போல, டிவிட்டர் நிறுவனம் கைவிட்டுப் போனாலும் ஒரு பெரும் தொகையை எடுத்துக்கொண்டு தான் வெளியேறுகிறார் பராக். கடந்த நவம்பர் 2021ல் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆன பராக் அகர்வாலுக்கு 40 மில்லியன் டாலருக்கு மேல் ஒரு தொகையை டிவிட்டர் நிறுவனம் கொடுக்கவேண்டியிருக்கும்.

நிறுவனத்தில் பங்குகள்:

டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக பணியாற்றிய பராக் அகர்வாலுக்கு நிறுவனத்தில் பங்குகளும் இருக்கின்றன. அமெரிக்காவின் Securities and Exchange Commission படி, பராகிற்கு128,000த்துக்கு கொஞ்சம் மேலாக ட்விட்டர் பங்குகள் இருக்கிறது எனவும்,

அவை இப்போது மஸ்க் செலுத்தும் விலையில் சுமார் 7 மில்லியன் டாலர் மதிப்புள்ளவை எனவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி பதவி விலகிய பிறகு, பராக் அகர்வால், தலைமை நிர்வாக அதிகாரியானார். அப்போது அவருக்கு அவரது மொத்த இழப்பீட்டுத் தொகை 30.4 மில்லியன் டாலர் பங்குகளாக வழங்கப்பட்டது. தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தசாப்த காலமாக நிறுவனத்துடனான அவரது தொடர்பும் முடிவுக்கு வந்தது. இவருக்கு அப்போது வழங்கப்பட்ட அவரது பங்குகளின் தொகையை தான் நிறுவனம் அகர்வாலுக்கு அளிக்கவேண்டும்

விஜயா கட்டேவின் பங்கு:

பராகை தவிர ட்விட்டரின் சட்டம் மற்றும் பாலிசி தலைவரான விஜயா கட்டேவுக்கு அவர் வைத்திருக்கும் சுமார் 623,156 ட்விட்டர் பங்குகள், பணி நீக்கத் தொகையாக 12.5 மில்லியன் டாலர்கள், தவிர கூடுதலாக 33 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என இந்தியா டுடே தளம் தெரிவிக்கிறது.

வரையறுக்கப்பட்ட பங்குகள் (Restricted shares):

இது இவர்கள் நேரடியாக வைத்திருக்கும் பங்குகள்.

இவற்றுடன் சேர்த்து 1.8 மில்லியனுக்கும் சற்று அதிகமான restricted sharesஐயும் இவர்கள் வைத்திருக்கிறார்கள். இந்த பங்குகள் அனைத்தும் இதற்கு ஈடாகாது. ஆனால், டிவிட்டர் நிறுவனம் தன்னையே விற்கும் பட்சத்தில், இவற்றில் ஒரு பகுதியை ஒப்படைக்க முடியும். ஆக, முன்னாள் சிஇஓ பராக் அகர்வால் சுமார் 50 மில்லியன் டாலரைப் பெற வாய்ப்புள்ளது.

மஸ்க்கிற்கு பராகை பிடிக்காதா?

1000 க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட ஒரு ஆரம்ப கட்டத்தில் அவர் ட்விட்டரில் சேர்ந்தார்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவதாக பேச்சுக்கள் எழுந்த போதே பராக் டிவிட்டரிலிருந்து நீக்கப்படுவார் என்ற கணிப்புகளும் இருந்தன. இதை நிரூபிக்கும் வகையில் லீக்கான உரையாடல்களும் அமைந்தது.

மேலும் மஸ்க்கை பொறுத்தவரை ட்விட்டர் நிர்வாகம் திறமையற்றதாகவும் இருந்திருக்கிறது. மஸ்க் மேலும், பராகை சாடியது மட்டுமல்லாமல், அவர் ஹவாயில் விடுமுறைக்காக சென்றிருந்ததையும் விமர்சித்தார். இதனால் டிவிட்டரை வழிநடத்தக் கூடிய தலைவர் அல்ல பராக் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

டிவிட்டரின் தலைமைக்குழுவில் இணைவதை நேரம் வீணாக்குதல் என்று மஸ்க் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது

parag-musk
Twitter : “என் வேலை போவதைப் பற்றி கவலை இல்லை, ஆனால்...” - ட்விட்டர் CEO பராக் அகர்வால்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com