Twitter: இனி பயனர்களுக்கு Gold, Grey, Blue Tick - எந்த நிறத்திற்கு என்ன அர்த்தம்?

அங்கீகாரம் வழங்கப்படும் கணக்குகள் ஒவ்வொன்றையும் தனித் தனியாக சரிபார்க்கப்பட்ட பின்னரே இந்த டிக் வழங்கப்படும் என மஸ்க் தெரிவித்தார்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்News Sense
Published on

ட்விட்டர் பயனர்களுக்கு இனி மூன்று விதமான வெரிஃபிகேஷன் குறியீடு வழங்கப்படும்.

ட்விட்டரில் பயனர் கணக்குகளை வெரிஃபை செய்யும் முறையில் செய்துள்ள மாற்றங்கள் குறித்து எலான் மஸ்க் கடந்த மாதம் பேசியிருந்தார்.

டிசம்பர் 2 ஆம் தேதி முதல் இந்த புதிய முறை செயல்பாட்டிற்கு வரலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ட்வீட் ஒன்றில் இனி மூன்று தர அங்கீகாரங்கள் ட்விட்டரில் வழங்கப்படும் என எலான் அறிவித்திருந்தார்.

அவை,

1.கோல்டன் டிக் - அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்

2.கிரே டிக் - அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனங்கள்

3.ப்ளூ டிக் - தனி நபர்களுக்கு

அங்கீகாரம் வழங்கப்படும் கணக்குகள் ஒவ்வொன்றையும் தனித் தனியாக சரிபார்க்கப்பட்ட பின்னரே இந்த டிக் வழங்கப்படும் என மஸ்க் தெரிவித்தார்.

“இந்த முறை கடினமானது என்றாலும், அவசியமானது” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Twitter

இந்த ப்ளூ டிக்கை பெறும் பயனர் மாதம் 8 டாலர் செலுத்தும் பட்சத்தில், அவர்கள் செலிபிரிட்டியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குறியீடு வழங்கப்படும்.

இதை தவிர தனி நபர்கள் ஒரு அமைப்பை சார்ந்தவர்களாக இருந்தால், அந்த அமைப்பின் லோகோவை வைத்துக்கொள்ளலாம். இதற்கு அந்த அமைப்பு, அந்த பயனர்களை வெரிஃபை செய்யவேண்டும்.

இந்த மூன்று விதமான டிக்குகள் பற்றிய விரிவான விளக்கத்தை மஸ்க் பின்னர் தெளிவுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளூ டிக் அங்கீகாரம் பெறுவதற்கு பயனர்கள் மாதம் 8 டாலர் கட்டணம் செலுத்தவேண்டும் என மஸ்க் முன்னர் அறிவித்திருந்தார். அது தற்போது அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது

எலான் மஸ்க்
எலான் மஸ்க்: "Blue Tick" வைத்திருக்க கட்டணம்; ட்விட்டரில் ரீல்ஸ் - புதிய மாற்றங்கள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com